ஸ்ரீரங்கத்தில் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி சுவாமி தரிசனம்!

Update: 2020-12-31 05:15 GMT

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக முதல்வரின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் நேற்றும் இன்றும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதில் இன்று அரங்கநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நுழைவு வாயிலில் கோவில் நிர்வாகத்தின் சார்பில், முதல்வருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், கோவில் யானை ஆண்டாளுக்கு ஆப்பிள், முலாம் பழங்களை வழங்கி, யானையிடம் ஆசி பெற்றார்.அப்போது முதல்வருடன் அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், வளர்மதி, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News