பொங்கல் பரிசு திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

Update: 2020-12-30 07:00 GMT

தமிழகஅரசின் பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் விநியோகிப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகஅரசு ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 2500 வழங்கப்படும் என அறிவித்தது. இதற்கான டாேக்கனை பல இடங்களில் அதிமுகவினர் வழங்குவதாக திமுகவினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இது தொடர்பாக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில், ரூ.2500 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை ரேசன் கடை ஊழியர்களே தர வேண்டும். பரிசுத் தொகை டோக்கனில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது தவறானது. ஆளுங்கட்சியினர் டோக்கன் வழங்குவதால், பரிசுத் தொகை பெரும்பாலானோருக்கு கிடைக்காது என தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News