குச்சனுார் சனிபகவான் கோவிலில் சனிபெயர்ச்சி விழா ;திரளான பக்தர்கள் தரிசனம்

Update: 2020-12-27 04:29 GMT

தேனி மாவட்டம் குச்சனூரில் புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டு வருகின்றனர்.

சனி பகவான் இன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதனை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள புகழ் பெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் சனிஸ்வர அதிகாலை 3 மணி முதல் பகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் யாக வேள்வி நடைபெற்றது. அதிகாலை நான்கு மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து மாரிகழி மாத திருப்பள்ளிஎழுச்சியும், அக்னி கார்ய ஹோமமும் நடைபெற்றது. அதிகாலை 5.22மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம்பெயர்ந்த நேரத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சனிப்பெயர்ச்சியைக் காண தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி முகக்கவசம் அணிந்து பக்தர்கள் கோயிலுக்கு வர அனுமதிக்கப்பட்டது.காவல் துறையின் சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தன.

Tags:    

Similar News