நடிகர் ரஜினியில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், முழு ஓய்வு எடுக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்தம் சீராகும்வரை ரஜினிகாந்த் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவித்தது.இந்நிலையில், இன்று காலை மீண்டும்அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் ரஜினியில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம் நேற்றைவிட கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் ரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாகவே உள்ளது. பரிசோதனைகள், ரத்த அழுத்தக் காட்டுப்பாடு ஆகிய முடிவுகளின் அடிப்படையில் எப்போது டிஸ்சார்ஜ் என்று மாலையில் முடிவு எடுக்கப்படும் என்று ஹைதரபாத் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.