அதிமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் உள்ளதா என்பதை தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்வோம் என நடிகர் செந்தில் கூறினார்.
புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் அங்கு நிறுவப்பட்டுள்ள சங்கரதாஸ் ஸ்வாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புதுக்கோட்டை சங்கத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை சால்வை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பேசுகையில்:- நடிகர் சங்கத்தில் இளைய தலைமுறையினர் வந்துள்ளனர். அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுவே என் முடிவு, கொரோனா காலத்தில் திரையரங்கு மூடப்பட்டதால் தயாரிப்பாளர்கள் படம் தயாரித்த நிலையில் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாததால் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள் என்பதே எனது கருத்து. ஜனநாயக நாட்டில் ரஜினி, கமல் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
நலிவடைந்த நாடக நடிகர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் உதவிகளை செய்திருப்பார்.அதிமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் உள்ளதா என்பதை தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்வோம், நான் இப்போது நடுநிலையாக தான் உள்ளேன். சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி செய்திகள் வருவது எனக்கு விளம்பரம் தான் என்று தெரிவித்தார்.