உருமாறிய கொரோனா வைரஸ், பாதுகாப்பாக இருப்பது எப்படி ? மரபணு விஞ்ஞானி விளக்கம்
இங்கிலாந்தில் புதிதாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என ஜப்பானில் பணிபுரியும் மரபணு விஞ்ஞானி விளக்கமளித்துள்ளார்.
உலகையே தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. அதன் தாக்கத்தில் இருந்தே பொதுமக்கள் இன்னமும் முழுதாக மீண்டு வராத நிலையில் தற்போது இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக பரவி வருவதால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் ஜப்பான் நாட்டின் க்யோட்டா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மரபணு விஞ்ஞானியான டாக்டர் நமச்சிவாய கணேசபாண்டியன் உருமாறிய கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என இன்ஸ்டா நியூஸ் செய்தி தளத்திற்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டியை காண வீடியோவை கிளிக் செய்யவும்