வாங்கும் ஒன்று, இரண்டு சதவீதம் வாக்குகளும் இருக்காது : சீமானுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
ஜெயக்குமார்;
சீமானுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கைள் கூட இல்லாமல் போய்விடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை காசிமேடு டோல்கேட் பகுதியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது,எம்ஜிஆரை உரிமை கொள்வதற்கு எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு ஆனால் அவரின் கொள்கைகளை தாங்கி நிற்கிற அதிமுக விற்கு தான் அவரின் ஆசி உள்ளது.
எம்ஜிஆரை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்கள்.நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஏதோ ஒன்று இரண்டு சதவீதம் வாக்கு உள்ளது எம்ஜிஆரை விமர்சனம் செய்தால் அதுவும் இல்லாமல் போய்விடும். மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எதுவும் செய்யவில்லை என்று திமுகவை சேர்ந்த ஆ. ராசா கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், இது ஒரு நகைச்சுவை என்று கூறினார்.