துணைமுதல்வர் மீது வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி

Update: 2020-12-24 09:22 GMT

கேரளாவில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக துணைமுதல்வர் ஓ.பி.எஸ் சொத்து குவித்துள்ளதாக பத்திரிகை செய்தி வெளிவந்த போதும், வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார்.

தேனியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது அவர் கூறும்போது,திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டி 99 பக்கங்கள் கொண்ட ஊழல் அறிக்கையை கவர்னரிடம் வழங்கியுள்ளார் இது குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து குவித்துள்ளதாக கேரளா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை இதுவரை வாய் திறக்காதது ஏன்?

மேலும் ஓபிஎஸ் குடும்பம் தேனி மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து குவித்து வருகிறது.இது குறித்தும் நடவடிக்கை இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று அதிமுக கோரிக்கை வைத்திருப்பது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் செயல். இவர்களுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News