தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் இதே கூட்டணி தொடரும் - முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி

தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி, புதிய தொழிற்சாலை அமைப்பது உள்ளிட்ட மாநிலத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு பரிந்துரைகளை கொரனாவிற்காக அமைக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2020-12-22 17:52 GMT

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று(22.12.2020) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக தாம் இங்கு வந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர்,

வாழ்வாதரம் இழந்து தவித்த மக்களுக்கு நிதி உதவி வழங்க ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாட அரசு ₹2500 வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மக்களிடத்தில் வரவேற்ப்பை பெற்றுள்ள இதனை பொருத்து கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் மீது பொய்யான குற்றாச்சாட்டை சுமத்தி வருகிறார்.

அவர் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அரசியல் ஆதாயத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கு என நிராகரிக்கப்பட்ட்டுள்ளது, எனக் கூறியவர் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் பெயரை பட்டியலிட்டு அவர்கள் மீது உள்ள பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

கொரானா தொற்று காலத்திலும் நாட்டிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகமம் தான் என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். அக்காலகட்டத்தில் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் விலையை குறைப்பதற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக அவர் கூறினார். தற்போது அனைத்து அரசு பணிகளுக்கான ஒப்பந்தங்களும் இ டெண்டர் மூலமாக மேற்கொள்ளப்படுவதால் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறியவர் திமுக ஆட்சியில் நடைபெற்ற சில ஊழல்களை பட்டியலிட்டார். திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு 200 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு பணி முடிக்கும்போது 470 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் எடுத்துக்காட்டினார். பொதுமக்களுக்கு உணவுத் துறையில் அரிசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பாக திமுக அளித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக முதலமைச்சர் தம்முடன் இருந்த உணவுத்துறை அமைச்சர் காமராசை வைத்து விளக்கமளிக்க செய்தார். தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் இதே கூட்டணி தொடரும் என்று அவர் கூறினார். திமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கு சுதந்திரம் இல்லை அவரை எதிர்த்து கருத்து சொல்லவே பயப்படுகின்றனர். எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் சுயமாக சுதந்திரமாக பேச கூடியவர்கள்.

கொரனா நோய் வளர்ந்த நாடுகளில் மீண்டும் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் முழு பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

நோய்த் தொற்றைத் தடுக்க அரசின் வழிகாட்டு நெறி முறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக விமான நிலையத்தில் வந்திறங்கிய முதலமைச்சரை தமிழக அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி சரோஜா, ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

Similar News