சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு : சக நடிகைகளிடம் ஆர்டிஓ விசாரணை..

Update: 2020-12-21 10:15 GMT

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் இன்று சகநடிகைகள் உட்பட 7 பேரிடம் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக அவருடைய கணவர் ஹேம்நாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சித்ராவிற்கு திருமணம் நடந்து இரண்டு மாதத்திற்குள் தற்கொலை செய்த காரணத்தினால் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது .சித்ராவின் தாய், தந்தை, மாமனார் ,மாமியார் மற்றும் கணவருடன் விசாரணை முடிந்த நிலையில் இன்று அவருடன் நடித்த சக நடிகை சரண்யா மற்றும் அண்டை வீட்டார்களிடம் விசாரணை நடைபெற்றது. முதலில் அண்டை வீட்டார்கள் 5 நபர்களிடம் இந்த விசாரணை நடைபெற்றது .அதன் பிறகு தனியாக சக நடிகை சரண்யா மற்றும் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட தனியார் விடுதி ரூம் பாய் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்றது.

Tags:    

Similar News