நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாசால் குடும்பங்கள் சீரழிந்து வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். மேலம் பல்வேறு துறைகளின் மூலமாக மொத்தம் 21,504 பயனாளிகளுக்கு ரூபாய் 129கோடியே 34லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் கூறும் போது, எதிர்கட்சித்தலைவர் தமிழக அரசில் எதுவும் செயல்படவில்லை என்று குறை கூறுகிறார். ஆனால் பலத்துறைகளிலும் விருதுகள் பெற்று இந்திய அளவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது என்று சாதனைகளை பட்டியலிட்டார்.
மேலும் ஐஐடியில் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றாததால் அங்கு கொரானோ தொற்று பாதிப்பு அதிகம் நடைபெற்றதாகவும், தற்போது மாணவர்களுக்குழு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலம் மாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் நிலம் மாற்றம் செய்யப்படும் என்று கூறினார்.மக்கள் நீதிமையம் தலைவர் கமல் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, அரசு எவ்வழியோ அதிகாரிகள் அவ்வழி என்று கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல் நடித்த படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளால் தான் குடும்பங்கள் சீரழிகின்றன என்றும், 70 வயதை கடந்த கமல் ஒரு அரசியல் கட்சித்தலைவரே அல்ல என்று கடுமையாக விமர்சித்தார்.