பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Update: 2020-12-16 04:47 GMT

அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் .

64-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது ,

ஊராட்சி , பேருராட்சி பகுதிகளில் விளையாட்டை ஊக்குவிக்க 67 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அரையாண்டு தேர்வை பொறுத்தவரை அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தனியார் பள்ளிகள் மட்டும் தேவைப்பட்டால் ஆன்லைனில் தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை என்ற நிலை இல்லை என்றும் , மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் , பாடத்திட்டங்கள் 1ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை 50 சதவீதமும் , 10 , 11 ,12 வகுப்பு 35 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநில மாணவர்களுடன் போட்டியிட வேண்டிய சூழல் இருப்பதால் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு 65சதவீதம் பாடம் நடத்த வேண்டி இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tags:    

Similar News