உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு: தமிழக அரசு அறிவிப்பு!

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு சிறப்பு குழுவை அமைத்தது.;

Update: 2022-03-03 12:30 GMT

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு சிறப்பு குழுவை அமைத்தது. இந்த குழுவில் தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் இந்த சிறப்பு குழுவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய தூதர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளும் என்றும், உக்ரைனின் மேற்கு பகுதியில் அதிகமான தமிழக மாணவர்கள் தங்கியிருப்பதால் அவர்களை மீட்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹங்கேரி, ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளின் வழியாக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News