பாஜ செய்த அந்த ஒரு செயலால் திமுகவுக்கு சிக்கல்
பாஜ செய்த காரியத்தால் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.;
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான சமூகங்களில், தேவேந்திரகுல வேளாளர் சமூகமும் ஒன்றாகும். ஆனால், சென்னையை சுற்றியுள்ள மாநகராட்சிகளுக்கு, பட்டியலின மேயர் பதவிகளில், அச்சமுதாயத்திற்கு இடம் தரப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஆவடி, தூத்துக்குடி, கோவை மாநகராட்சிகளில், தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தை சேர்ந்த திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், அச்சமுதாய மக்களின் ஓட்டுகளே, திமுகவுக்கு அதிகமாக கிடைத்துள்ளன. தேவேந்திர குல வேளாளர் அதனால், திமுக கட்சியிலும் சரி, அமைச்சரவையிலும் சரி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கு, போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற குறை அச்சமூகத்தினருக்கு இன்னமும் இருக்கவே செய்கிறது. அதனால்தான், இந்த முறை மேயர் பதவி, குறிப்பாக, தூத்துக்குடி, கோவை, ஆவடி ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளை, அந்த சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும் என்று அனைத்திந்திய தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளதாம்.
இந்த கோரிக்கையை திமுக மேலிடம் பரிசீலிக்குமா என்று தெரியவில்லை. காரணம், சட்டசபை தேர்தலில், அந்த சமுதாயத்தினர் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததால், திமுகவுக்கு சற்று கோபம் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், பல பெயரில் அழைக்கப்பட்ட அந்த சமுதாய மக்களை, ஒரே பிரிவாக அதாவது தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க காரணமாக இருந்ததே பாஜகதான். மேலும், பட்டியலினத்தில் இருந்து விடுவிக்கவும் அக்கட்சி வாக்குறுதியையும் அக்கட்சி தந்துள்ளது. விசுவாசம் அதனாலேயே, அந்த சமுதாயத்தினர் பாஜக மீது விசுவாசம் காட்டப்படுவதாகவும், அதனாலேயே இச்சமூகத்தினரை திமுக ஒதுக்கி பார்ப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், தமிழகத்தில் பாஜகவின் நிலை உயர்ந்து இருக்கிறது என்றால், அதுக்கு முக்கிய காரணமே தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் தான். தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வழங்கியதில் அடிப்படையில் நன்றி விசுவாசமாக 80 சதவிகித விழுக்காடு இந்த முறை பாஜகவுக்கு வாக்களித்து இருக்கிறோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் திமுக மேலிடம் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளது. தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பதவி ஏதும் கொடுக்கவில்லை என்றால் வரும் தேர்தலில் திமுகவை பதம்பார்த்து விடுவார்கள். இதனால் முதல்வர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் புலம்பி வருகின்றனர்.