அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆப்பு... சென்னை ஐக்கோர்ட் புது உத்தரவு

வேறு தொழிலில் ஈடுபடும் அரசு ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்தது போன்று சென்னை ஐக்கோர்ட் புது உத்தரவு அளித்துள்ளது.

Update: 2022-03-01 08:30 GMT

சென்னை உயர்நீதி மன்றம்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வருமானத்தை அள்ளி கொடுத்து வருகிறது தமிழக அரசு. அதேவேளையில் அவர்களுக்கு தேர்தல் பணி உள்ளிட்ட பணிகளிலும் அவ்வப்போது ஈடுபடுத்தி வருகின்றது. இந்நிலையில் சில அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒழுங்காக வருவதில்லை என்றும், மருத்துவ விடுப்பு எடுத்து தங்களது சொந்த தொழிலை பார்க்க செல்வதாகவும், மேலும் சில ஆசிரியர்கள் மாலையில் டியூசன், பகுதிநேர வேலை என்று இப்படி எப்பவும் பிஸியாகவே உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் டியூஷன், பகுதி நேர வேலை, இதர வேறு தொழில்கள் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கவும், அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னை ஐக்கோர்ட்டின் இந்த புதிய உத்தரவால் பல ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளதாக ஆசிரியர்கள் தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News