கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் வணிகர்கள் அதிர்ச்சி
சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ. 105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.;
சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்று ரூ.915.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்வு ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.