உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப உதவி: ஆணையரகம் அறிவிப்பு

உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தை அணுகலாம்

Update: 2022-02-24 08:26 GMT

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கானோர் பலியாகி உள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யாவின் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை 103 டாலர்களை தாண்டியது. இதேபோல் தங்கத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.864 உயர்ந்து சவரன் ரூ.38,616க்கும், ஒரு கிராம் ரூ.4827க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போர் சூழல் பிரச்னையில் இந்தியா நடுநிலை வகிக்கும் எனவும், அமைதியை ஏற்படுத்தும் தீர்வை எதிர்நோக்கி இருப்பதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மேலும் உதவிகளுக்கு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை +380 997300428, +380 997300483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் situationroom@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 1800 118797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல் உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன்-மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது. 044-28515288 / 96000 23645 / 99402 56444 என்ற தொலைபேசியிலும், nrtamils.tn.gov.in என்ற இணையத்திலும் தொடர்பு கொள்ளலாம். 

Tags:    

Similar News