உலகின் வேகமான மனிதன் யார் தெரியுமா?
உலகின் அதிவேக வீரர் என்றாலே இவர் பெயர் தான் நினைவிற்கு வரும். இவர் யார் தெரியுமா?
ஒரு சின்ன பையனுக்கு கிரிக்கெட்டில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், அவனுக்கு அன்றைக்கு தெரியாது. எதிர்காலத்தில் ஓட்டபந்தயத்தில் அவன் தான் உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய மனிதன் ஆவான் என்று. இத்தனை பெருமைக்குரிய நபர் வேறு யாருமில்லை, உசைன் போல்ட் தான்.
1986, ஜமைக்காவில் உசைன் போல்ட் பிறக்கிறார். இவருடைய சிறுவயது முதலே பெரிய கிரிக்கெட்டராக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார். இவர் வேகமாக பவுலிங் போடுவதை கவனித்த இவருடைய பயிற்சியாளர், ‘உனக்கு கிரிக்கெட்டை விட ஓட்டப்பந்தயத்தில் பெரிய எதிர்காலம் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
அன்றைக்குஅந்த பையனுடைய பாதை முழுமையாக மாறுகிறது. அதற்கு பிறகு அவன் நிறைய ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள ஆரம்பிக்கிறான். நிறைய போட்டிகளிலும் ஜெயிக்கத் தொடங்குகிறார். தன்னுடைய 15 வயதில் World junior championship title ஜெயித்த பிறகு எப்படியாவது ஒலிம்பிக்ஸில் கோல்ட் மெடல் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளை வைத்துக்கொள்கிறார்.
2004 ல் நடந்த ஒலிம்பிக்ஸில் முதல் ரவுண்ட் கூட இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ரொம்ப ஈஸியாக அவுட் ஆகிவிட்டு வெளியே வருகிறார். இந்த சமயத்தில்தான், scoliosis என்ற நோயால் பாதிக்கப்பட்டு முதுகுவலியால் துடித்துப் போகிறார். மருத்துவர்கள் இனி இவர் ஓடவே கூடாது என்று சொல்கிறார்கள். 'அவ்வளவுதான் இவனுடைய வாழ்க்கையே முடிந்து விட்டது' என்று சுற்றியுள்ளவர்கள் சொல்கிறார்கள்.
இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து டிரீட்மெண்ட் எடுத்துக்கொண்டு, ஓட்டப் பந்தயத்தையிலும் பயிற்சி எடுத்து 2008ல் நடக்கும் ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொள்கிறார். எந்த ஒலிம்பிக் போட்டியில் இவரை பார்த்து சிரித்து அவமானப் படுத்தினார்களோ அதே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கத்தை ஜெயிக்கிறார். இது மட்டுமில்லாமல் அடுத்தடுத்து நடந்த ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டு தொடர்ந்து ஜெயித்து இதுவரை 8 தங்கப்பதக்கம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை இவருடைய ரெக்கார்ட்டான 9.58 Seconds ஐ யாராலும் தோற்றக்கடிக்க முடியவில்லை.
இந்த கதை மூலம் என்ன தெரிகிறது. ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எந்த குறையும் தடையாக வந்து விட முடியாது. விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தாலே போதும், வாழ்க்கையில் எப்பேற்பட்ட சூழ்நிலை வந்தாலும் வெற்றியடைய முடியும். அதற்கு உசைன் போல்ட்டே ஒரு சிறந்த உதாரணமாகும்.