நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் மோதிய 16 வது போட்டியில் தனது முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்தது;
இந்த வருடம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐபிஎல் 18 வது சீஸனின் 16 வது போட்டியில் மும்பை கொல்கத்தா அணிகள் நேற்று மோதின மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியவும், கொல்கத்தா அணியை அஜின்கியா ரஹானேவும் கேப்டனாக வழிநடத்தி சென்றன இதில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து கொல்கத்தா அணியில் முதலில் ஓபணர்களாக களமிறங்கிய குயிண்டன் டிகாக் ,சுனில் நரென் முதல் மூன்று ஓவர்களிலே தங்களது விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து களமிறங்கிய ரஹானேவும் சொர்ப்ப ரன்னில் அவுட் ஆகா அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் ஒற்றை இழக்க ரங்களில் அவுட் ஆகி கொக்கத்தா அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார், 16.2 வர்களில் தங்களது 10 விக்கெட்டையும் பறிகொடுத்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது, இந்த போட்டியில் மும்பை அணி 117 என்ற ரன்னை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் ஓபனர்கள் ரோகித் சர்மா ரிக்கில்டன் தங்களது அணிக்கு வெற்றிக்காக ரன்களை குவிக்க தொடங்கினர் 13 ரன்னில் ரோஹித் சர்மாவும் அடுத்து களமிறங்கிய வில் ஜாகஸ் 16 ரன்களில் அவுட் ஆகினர் ,சூர்யாகுமார் யாதவ் 27, அதிரடியாக விளையாடிய ரிகிள்டன் 62 ரன்களையும் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மான்களாக காலத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து இந்த 18 வைத்து சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மும்பை இந்தியன்ஸில் பௌலிங்கில் அசுவனி குமார் 4 விக்கெட் எடுத்தது குறிப்பிடதக்கது .