ஜேகேகேஎன் கல்வி நிறுவனத்தில் மாநில ஜூனியர் wrestling சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது

மாநில ஜூனியர் wrestling போட்டியினை, ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-12 07:49 GMT

மாநில ஜூனியர் ரஸ்டலிங் போட்டியை ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தொடங்கி வைத்தார்.

மாநில ஜூனியர் wrestling போட்டிகள் ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் இன்று தொடங்கியது. போட்டியினை  ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு அமெச்சூர் wrestling அசோசியேஷன் மற்றும் ஜேகேகேஎன் கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு மாநில ஜூனியர் wrestling சாம்பியன்ஷிப் போட்டிகள்-2021-22 இன்று தொடங்கியது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான இந்த போட்டி இன்றும் நாளையும் நடக்கிறது. இன்று காலை நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜேகேகேஎன் கல்வி நிறுவன வளாகத்தில் இந்த போட்டியினை, ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் இன்றும் நாளையும் நடக்கிறது.

இப்போட்டிகள்  தென்னிந்திய மல்யுத்த சங்கத்தின் பொருளாளரும், தமிழ்நாடு மல்யுத்த சங்க பொதுச் செயலருமான எம். லோகநாதன் மேற்பார்வையில் நடைப்புறுகின்றன. இப்போட்டியில் சேலம், நாமக்கல், ஈரோடு, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 328 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

Tags:    

Similar News