Asia cup finals,asia cup 2023 finals-"பாத்து ஆடுங்க பசங்களா, நீங்க ஜெயிக்கணும் : சோயிப் அக்தர்..!

ஆசியக்கோப்பை 2023 சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியா வங்காளதேச அணியுடன் தோற்றதை பாடமாக எடுத்துக்கொண்டு திறமையாக விளையாட பாக். முன்னாள் வீரர் சோயிப் அக்தர் உற்சாகப்படுத்தியுள்ளார்.

Update: 2023-09-17 11:05 GMT

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப்  அக்தர் (கோப்பு படம்)

Shoaib Akhtar comments on India's chance to win against Sri Lanka,Asia cup finals,asia cup 2023 finals,India vs Sri Lanka,India vs Sri Lanka live match,asia cup India vs Sri Lanka,India vs Sri Lanka live,India vs Sri Lanka match

ஆசிய கோப்பை 2023 இல் ஒரு ஆச்சரியமான திருப்பமாக, கொழும்பில் நடைபெற்ற சூப்பர் ஃபோர் போட்டியின் போது வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெறத் தவறியது. பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர், இந்த நிகழ்வை இந்தியா "விழிப்படைய வேண்டும்" என்று விவரித்தார். இந்தியா முழு முயற்சியுடன் விளையாட தயாராக வேண்டும். எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்ற தங்கள் ஆட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"யே கலா ஜி கா கர் நஹி ஹை ஜஹா பே இந்தியா ஜேக் ஆராம் சே ஜீத் லெகா. இதன் அர்த்தம் இந்தியா எளிதில் வெற்றி பெறும். இது ஒன்றும் அவர்களின் அத்தையின் வீடு அல்ல. இந்தியாவோடு விளையாடும் ஆட்டம் கடினமான விளையாட்டாக இருக்கும்" என்று அக்தர் அவரது YouTube சேனலில் கூறியுள்ளார்.

“பங்களாதேஷ் போன்ற அணியிடம் இந்தியா தோற்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர். இது ஒரு அவமானகரமான தோல்வி. பாகிஸ்தான் இலங்கையிடம் தோற்று ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியதும் இன்னும் பெரிய அவமானம்.

இந்தியா இன்னும் இறுதிப்போட்டியில் உள்ளது. அவர்கள் இன்னும் எதையும் இழந்துவிடவில்லை. வங்காளதேச அணியிடம் தோற்றது அவர்களுக்கு ஒரு எழுச்சியை கொடுக்கவேண்டும். கடினமாக திரும்பி வந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதை உறுதிசெய்ய இதை ஒரு சிறந்த விழிப்புணர் பாடமாக இருக்கவேண்டும். ஆனால் அதற்கு இந்தியா நன்றாக விளையாடினால் மட்டுமே அது நடக்கும்" என்று ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் மேலும் கூறியது.

வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தோல்வி

விராட் கோலி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் போன்ற முக்கிய வீரர்கள் இந்தப் போட்டியில் திறமையாக விளையாடவில்லை என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், இந்திய அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் உள்ளனர்.

ஷுப்மான் கில் சதம் அடித்தார் மற்றும் கேஎல் ராகுலுடன் ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் ஆகா நின்று ஆடினார். இருந்தபோதிலும், ஆட்டம் விரைவில் வங்கதேசத்திற்கு சாதகமாக மாறியது. கில்லின் சதம் போட்டியைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை. ஏனெனில் அணி 6 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அக்சர் படேலும் அவரது இன்னிங்ஸின் போது பல காயங்களுக்கு உள்ளானார்.

பங்களாதேஷ் போட்டியில் விளையாடுவதற்கு முன்பே இந்தியா இறுதிப் போட்டிக்கான இடத்தைப் பதிவு செய்தது. இருப்பினும், வங்கதேசத்துக்கு எதிரான எதிர்பாராத தோல்வி எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.

'பார்த்து ஆடுங்க பசங்களா..நீங்கதான் ஜெயிக்கணும்'என்று சோயிப் அக்தர்,இந்திய அணியை உற்சாகப்படுத்துகிறார்.

Tags:    

Similar News