ஷாஹீன் அப்ரிடி திருமண புகைப்படங்கள் வைரல்..! ட்விட்டரில் வேதனை..!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியின் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதற்கு தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

Update: 2023-02-05 07:47 GMT

பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷா அப்ரிடியை கடந்த 3ம் தேதி திருமணம் செய்துகொண்டார். ஷாஹீன் அப்ரிடி, தனது திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை அவர் பொதுவெளியில் பதிவிடாமல் பாதுகாத்து வந்தார். அவர் திருமணத்தின்போது அவர்களின் கலாசார ஆடையில் மிக அழகாக இருவரும் இருந்த ஒரு சில புகைப்படங்களை மட்டும் வெளியிட்டிருந்தார்.

pak pacer shaheen marriage photos leaked

அவரும், மணமகள் மற்றும் அவரது மாமனார் ஷாஹித் அப்ரிடி மற்றும் விருந்தினர்களுடன் இருக்கும் சில படங்களை ஷாஹீன் ட்விட்டரில் வெளியிட்டார். "அல்ஹம்து லில்லாஹ், சர்வவல்லமையுள்ளவர் மிகவும் கருணையும் தாராளமும் கொண்டவர். நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆடையாக இருப்போம். நல்வாழ்த்துகள். எங்கள் சிறப்பு நாளை இன்னும் சிறப்பாக மாற்றியமைத்த அனைவருக்கும் நன்றி. உங்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் எங்களை நினைவில் வையுங்கள்" என்று ஷாஹீன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஷாஹீன் உங்கள்  சொந்த ட்வீட்டில் படங்களைப் பகிர்வதை நிறுத்துங்கள். எனக்கும் எனது மனைவிக்குமான தனியுரிமையைத் தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார். "பலமுறை நான் கோரிக்கைகள் விடுத்தபோதிலும், எங்கள் தனியுரிமை பறிக்கப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட எங்களின் தனியுரிமை குறித்த எந்த குற்ற உணர்வும் இல்லாமல் மக்கள் அதை மேலும் பகிர்ந்துகொண்டது மிகவும் எனக்கு ஏமாற்றமளிக்கிறது. எங்களுடைய மறக்கமுடியாத பெருநாளைக் கெடுக்க முயற்சிக்காமல் எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அனைவரையும் மீண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று ஷாஹீன் கருத்துத் தெரிவித்து வேதனை வெளியிட்டிருக்கிறார்.

pak pacer shaheen marriage photos leaked 

திருமணம் முடிந்து உடைந்த மன நிலையில் இருந்து சற்றே மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீனின் கவனம் பிஎஸ்எல் பக்கம் திரும்புகிறது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு, பிஎஸ்எல் எட்டாவது சீசனில் மீண்டும் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழே உள்ள ட்விட்டர் இணைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவை காணலாம்.

https://twitter.com/iShaheenAfridi/status/1621847245699031040?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1621847245699031040%7Ctwgr%5E6b6f368e4acb6c564b0cbd021973ef0b431bb878%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.insidesport.in%2Fshaheen-afridi-wedding-afridi-disappointed-with-people-sharing-his-wedding-pictures-online-says-our-privacy-was-hurt-check-out%2F

Tags:    

Similar News