வில்வித்தை போட்டியில் பதக்கம்: மாணவர்களுக்கு எம்எல்ஏ பாராட்டு
மாநில வில்வித்தைப் போட்டியில் பதக்கம் வென்ற நாமக்கல் மாணவர்களை, எம்எல்ஏ ராமலிங்கம் பாராட்டினார்.;
புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற மாணவர்கிளை, நாமக்கல் எம்எல்ஏராமலிங்கம் பாராட்டினார்.
கொரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், தான் படித்த புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று, பள்ளிக்கு மாணவ மாணவிகள் வருகை மற்றும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பள்ளியை மேம்படுத்துவது குறித்து அவர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற, 14வது மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 15 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, 21 பதக்கங்களை வென்றுள்ளனர் அவர்களில் கவியரசி, ஜானியா, சாதனா ஆகியோர் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்றவர்களுக்கு எம்எல்ஏ ராமலிங்கம் பாராட்டு தெரிவித்தார். வில்வித்தை பயிற்சியாளர் ரஞ்சித்குமார், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கவுதம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.