டோக்கியோ ஒலிம்பிக் : இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

ஒலிம்பிக்கில் பத்தாம் நாளான ஆகஸ்ட் 2 அன்று தடகளம், ஹாக்கி மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியாவின் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.;

Update: 2021-08-02 02:33 GMT

டோக்கியோ ஒலிம்பிக் : ஆகஸ்ட் 2 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் பத்தாம் நாளான ஆகஸ்ட் 2 அன்று தடகளம், ஹாக்கி மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியாவின் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். அதன் விவரம்.

தடகளம்

காலை 07:24 - 200 மீட்டர் மகளிர் ஓட்டம் - டூட்டி சந்த்.

மாலை 04:30 - மகளிர் வட்டு எறிதல் இறுதிப் போட்டி - கமல் ப்ரீத் கவுர்.

ஹாக்கி

காலை 08:30 - மகளிர் ஹாக்கி - காலிறுதிப் போட்டி - இந்தியா VS ஆஸ்திரேலியா.

துப்பாக்கி சுடுதல்

காலை 08:00 - ஆடவர் 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொசிஷன்- தகுதி சுற்று - ஏ.பி.எஸ்.தோமர்.

Tags:    

Similar News