ஒலிம்பிக் அரை இறுதியில் நுழைந்த இந்திய ஹாக்கி அணி-இந்தியா வரலாற்று சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய மகளிர் அணி இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அபாரமாக வெற்றிப்பெற்று அரையிறுதியில் நுழைந்துள்ளது.

Update: 2021-08-02 05:47 GMT

இந்திய மகளிர் அணி

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய மகளிர் அணி இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அபாரமாக வெற்றிப்பெற்று அரையிறுதியில் நுழைந்துள்ளது.

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி பிரிவில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையே காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் இருந்தே இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவின் குர்ஜித் கவுர் ஆட்டத்தின் முதல் பாதியில் முதல் கோலை அடித்தார். இதனையடுத்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.


இந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் 2 அணியான ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் வீராங்கனைகளை கோல் அடிக்க விடாமல் இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து தடுத்தனர். இறுதியாக 2ஆம் பாதி முடிவிலும் ஆஸ்திரேலிய கோல் அடிக்காததால் இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்று ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் நுழைகிறது. இந்திய மகளிர் ஹாக்கி தங்களுடைய அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது.



Tags:    

Similar News