தேசிய ஹேக்கத்தான் போட்டி: கொங்குநாடு இன்ஜி. கல்லூரி மாணவிகள் சாதனை

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவிகள், தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2022-01-10 11:15 GMT

தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் வெற்றிபெற்ற, தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவிகளை, கல்லூரி சேர்மன் பெரியசாமி பாராட்டினார்.

புதுடெல்லியில் உள்ள சூரஜ்மல் இன்ஜினியரிங் கல்லூரி சார்பில், ஆன்லைன் மூலம் பல்வேறு தலைப்புகளில் தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி 3 சுற்றுகளாக மருத்துவம், கல்வி, சுற்றுச்சுழல், விவசாயம், பெண்கள் பாதுகாப்பு, தகவல் மற்றும் நிதி தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளில் நடைபெற்றது.

இதில் தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி, 3ம் ஆண்டு இசிஇ மாணவிகள் மோனிகா மற்றும் பிரதீபா ஆகியோர், டெக் டைக்கூன்ஸ் என்ற அணி பெயரில் கலந்து கொண்டு, தேசிய அளவில் 3வது பரிசை வென்றனர். இவர்கள் உருவாக்கிய இன்டர்நெட் அப்ளிகேசன் மூலம், பெண்கள் ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால், அவர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு, எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை தகவல் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் சாதனைபடைத்த மாணவிகளை, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி, கல்லூரி முதல்வர் அசோகன், இசிஇ துறைத்தலைவர் தர்மலிங்கம்  கியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News