இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி
இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.;
இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை எளிதில் தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275- ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 276- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றியை தட்டிச்சென்றது. 49.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை எட்டியது.
தீபக் சஹார் 69-ரன்களிலும் புவனேஷ்குமார் 19-ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.