டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்- குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினாவுக்கு பதக்கம் உறுதி

Update: 2021-07-30 04:27 GMT

இந்திய வீராங்கனை லோவ்லினா

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்- குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினாவுக்கு பதக்கம் உறுதியானது

குத்துச்சண்டை பெண்களுக்கான வெல்டர் (64-69 கிலோ) பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் சீன தைஃபேயின் நின்-சின்-சென்னை எதிர்கொண்டார்.

இதில் லோவ்லினா 4:1 (30-27, 29-28, 28-29, 30-27, 30-27) என அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

அரையிறுதி போட்டிகளில் தோல்வியடையும் வீராங்கனைகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News