சோழவந்தான் பகுதி கோயில்களில் டிச.20-ல் மாலை , சனிப்பெயர்ச்சி விழா: சிறப்பு ஹோமங்கள்
சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் மற்றும் பிரளயநாத சிவன் கோயில்களில் இம் மாதம் 20-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது;
மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் வருகின்ற 20ந்தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இந்தகோவிலானது சனியால் ஏற்பட்ட சகலதோஷங்கள் நீங்குவதற்கும் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார தலமாகவும் விளங்குகிறது
இக்கோவிலின் கும்பாபிஷேகமானது 1975 ஆம் ஆண்டு காஞ்சி மகா பெரியவர் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது கும்பாபிஷேகத்தன்று சனி பகவானின் சிலையை விசாக தினத்தன்று இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதால் விசாக நட்சத்திரத்தன்று இங்கு தரிசனம் செய்வது சிறப்புடையதாக நம்பப்படுகிறது மேலும் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறுவதற்கும் வறுமை நீங்கி வளமை பெறுவதற்கும் இத்தலத்தில் வழிபாடுகள் செய்யப்படுகிறது.
இந்து சமய அறநிலைத்துறையின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோயிலில் காலை மாலை என இரு நேரங்களில் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்று நடைபெறுகிறது. திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் மாவலிங்க மரத்தடியில் விநாயகப் பெருமான் அமர்ந்திருக்க அவரின் இருபுறத்திலும் ராகு கேது அமைந்திருப்பது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது
சுயம்பு பகவானுக்கு சனிக்கிழமைகளில் நடைபெறும் அபிஷேகங்களில் சொர்ணாபிஷேகம் ஒன்றாகும். இந்த அபிஷேகங்களில் பக்தர்கள் தட்டில் சில்லறை காசுகளாக வழங்கப்படும் காணிக்கையானது பக்தர்களுக்கு தானமாக வழங்கப்படும். அதை வீட்டில் கொண்டு சென்று வைத்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது
இங்கே சனீஸ்வர பகவானுக்கு நெல்லிக்காய் பொடியினாலும் வில்வ இலை பொடியினாலும் அபிஷேகம் நடைபெறுவதால் தரித்திரம் நீங்கி செல்வ கடாட்சம் பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது. அது மட்டுமின்றி பக்தர்கள் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன் நிறைவேறிய பிறகு சனீஸ்வர பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பக்தர்கள் வழங்கும் அபிஷேகப் பொருட்களும் அன்னதானமும் வழங்குவதோடு கூடுதலாக அழகர் கோயில் நூபுர கங்கையில் உள்ள தீர்த்தத்தை எடுத்து வந்து சனீஸ்வர பகவானுக்கு தெளிப்பது பக்தர்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது
ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சனி பகவானை வழிபட்டு செல்வது அதிகரித்துக் கொண்டே வருவதால் முடிந்த அளவு முன்கூட்டியே 9750470701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வந்தால் பல்வேறு சிரமங்களை தவிர்க்கலாம்.
இதேபோல, மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், இம் மாதம் 20-ம் தேதி புதன்கிழமை மாலை 4.30..மணிக்கு சனிப்பெயர்சியையொட்டி, மகாயாகம் நடைபெறுகிறது.
சனிபகவான், மகர ராசியிலிருந்து- கும்ப ராசிக்கு இடம் மாதம் 20-ம் தேதி புதன்கிழமை மாலை 5.15..மணிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
அதையொட்டி, சோழவந்தான் வரதராஜ பண்டிட் தலைமையில், பிரசாத் சாஸ்திரிகள், காசி விஸ்வதாதன், விஸ்வநாதன் கொண்ட வேதியர்கள் குழு சிறப்பு யாகங்களை செய்கின்றனர். இக் கோயிலில் சனீஸ்வர பகவான் லிங்க வடிவில், வன்னிமரம் தடியில் சுயம்பாக இருந்து அருள்பாலிக்கிறார். இக் கோயிலில் சனி, ராகு, குரு ஆகிய இணைந்த கோயிலாகும்.
சுவாமியானவர் ராகுவுக்கு அதிபதி ஆவார். சனிப்பெயர்ச்சி அன்று மாலை 5 .15..மணிக்கு சனிபகவானுக்கு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை, சோழவந்தான் தொழில் அதிபர் எம்.வி.எம். மணி, பள்ளித் தாளாளர், கவுன்சிலர் எம். மருதுபாண்டியன், கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயம் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.