திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகுடாபிஷேக உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகுடாபிஷேக உற்சவம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்

Update: 2022-02-19 00:48 GMT

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் பெரிய நாயகர் அண்ணாமலையாருக்கு மகுடாபிஷேகம் நடைபெற்றது, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வல்லாள மகாராஜா. இவர் குழந்தை பேறு இல்லாமல் தவித்த போது அருணாசலேஸ்வரர் குழந்தையாக தரிசனம் அளித்ததாக ஆன்மிக புராணங்கள் தெரிவிக்கிறது.

இதனால் சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வல்லாள மகாராஜாவிற்கு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து கவுதம நதியில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமிக்கு,  மகுடாபிஷேக உற்சவம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வன்னிய குலசத்திரிய வல்லாள மகாராஜா மடாலய சங்கத் தலைவர் முன்னாள் எம்.பி. த.வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News