மதுரை மாநகர வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆய்வு
மதுரை மாநகர வளர்ச்சி பணிகளை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.;
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, ஆணையர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.77 சுந்தரராஜபுரம் ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் ரூ.17.70 லட்சம் மதிப்பீட்டில், மேற்கொள்ளப் பட்டுள்ள மராமத்து பணிகளையும்,
வார்டு எண்.91 ராமையா 14வது தெரு, மீனாட்சி அவென்யூ 1 மற்றும் 2வது தெருவில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டில் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும்,
வார்டு எண்.91 ராமையா தெரு பகுதியில் உள்ள சேதுபதி தெருவில் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், வார்டு எண்.91 ஜெய்ஹிந்துபுரம் 60 அடி ரோடு பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும்,
வார்டு எண்.77 மற்றும் 92 கோவலன் நகரில் ஒருங்கிணைந்த சத்துணவு கூடத்தில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள பணிகளையும்,
வார்டு 96 பாம்பன் நகர் பகுதியில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதையும், வார்டு எண்.97 ஹார்விப்பட்டி 3வது தெருவில் ரூ.8.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அங்கன்வாடி மையத்தினையும் என, மொத்தம் ரூ.67.55 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள பல்வேறு பணிகளை ஆணையர், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சாலையின் தரம் குறித்தும், அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை தரமாக வழங்குமாறும், அங்கன்வாடி வளாகத்தை தூய்மையாகவும் பராமரிக்குமாறு கூறினார்.
மேலும், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவிப்பொறியாளர்கள் .ஆறுமுகம், குழந்தைவேலு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.