முதலிரவில் பாலும் பழமும் ஏன் கொடுக்கிறோம்..? அறிவியலும் கலாசாரமும்..!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி உலக பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த ஆண்டு உலக பால் தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
World Milk Day 2024
வரலாறு:
கிமு 9000-7000 புதிய கற்காலத்தின் போது, மனிதர்கள் வளர்ப்பு விலங்குகளை வைத்திருந்தனர். பால் நுகர்வு அந்தக் காலத்திலேயே இருந்தது. ஆனால் மனிதர்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாததால், அவர்கள் காய்ச்சிய பாலை குடிக்க ஆரம்பித்தனர்.
World Milk Day 2024
விரைவில் இது அனைவருக்கும் ஊட்டச்சத்துக்கான ஆதாரமாக மாறியது - உண்மையில், பல கலாசாரங்களில் பால் இறைச்சிக்கு மாற்று நுகர்வாக மாற்றப்பட்டது. பிரபஞ்சத்தை படைத்தவரால் பால் பூமிக்கு அனுப்பப்பட்டதாக அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் நம்பியதால் பால் மதம் சார்ந்த மரபுகளிலும் பயன்படுத்தப்பட்டது.
காலப்போக்கில், பால் என்பது தனி தொழிலாக உருவாகிவிட்டது. தற்போது நுகர்வோரின் விருப்பத்துக்கு ஏற்ப பால் கிடைக்கிறது. ஆனாலும் தொழில் மயமாக்கப்பட்ட பால் விநியோகம், நுகர்வோர் விருப்பங்களில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் பாலுக்கு மாற்றாக சத்துள்ள உணவுப்பொருட்கள் கிடைப்பதால் பால் நுகர்வு பாதிக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
World Milk Day 2024
நாம இப்போது பாலில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் யாவை?
பாலில் கால்சியம், வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ், 0.94 அளவு புரதம், 1.08 அளவு கொழுப்பு மற்றும் 1.36 அளவில் கார்போஸ் ஆகியவை அடங்கி உள்ளன.
World Milk Day 2024
பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
- தினமும் காலையில் சூடான பாலை குடித்து வந்தால் எலும்புகள் வலிமையாகும். ஏனெனில்,பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது. கால்சியம் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் கீல்வாத நோயின் தாக்கத்தை தடுக்கிறது.
- உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தினசரி காலையில் பாலை குடித்து வரலாம்.
- மன அழுத்தம் உள்ளவர்கள் காலைவேளையில் சூடான பாலை உட்கொள்ள வேண்டும். பால் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளதால் அவைகள் மன அழுத்தத்தை போக்குவதற்கு உதவுகின்றன. தினமும் காலை நேரத்தில் பால் குடிப்பதால் பலவீனமானவர்கள் ஆரோக்யம் பெறமுடியும். மேலும், பால் ஆரோக்யத்தை ஏற்படுத்துவதால் உடல் உற்சாகமடைகிறது.
World Milk Day 2024
- மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் காலை நேரத்தில் சூடான பால் குடிக்க வேண்டும். பாலில் கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் அவைகள் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நன்மை அளித்து சோர்வைத் தடுக்கிறது.
- தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் பால் குடிக்க வேண்டும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் மூளைக்கு ஓய்வளித்து தூக்கம் தொடர்பான கோளாறுகளை சரி செய்வதுடன் நிம்மதியான தூக்கத்தையும் தருகிறது. மேலும் இரவு வேளையில் பால் குடிப்பதால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- பெண்களுக்கு மிருதுவான பளபளப்பான, பொழிவுடன்கூடிய முக சருமத்துக்கு தினமும் இரவில் பால் குடித்தால் முக சருமம் மென்மையாகி அழகுபெறும்.
World Milk Day 2024
குழந்தைகளுக்கு தினமும் எவ்வளவு பால் கொடுக்கவேண்டும்?
மருத்துவர் பரிந்துரைப்படி, உங்கள் குழந்தை ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் என்பது கீழே தரப்பட்டுளளது :
- 12 முதல் 23 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை கப் முதல் இரண்டு கப் பால் கொடுக்க வேண்டும்.
- இரண்டு முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை கப் பால் கொடுக்கலாம்.
- நான்கு முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் இரண்டரை கப் பால் குடிக்கலாம்.
- 9-13 வயது முதல் குழந்தைகளும் 14-18 வயது வரை உள்ள சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் தினமும் மூன்று கப் பால் குடிப்பது நல்லது.
World Milk Day 2024
முதலிரவில் பாலும் பழமும் எதற்கு ?
முன்னோர்கள் செய்யும் ஒவ்வொரு சடங்கில் ஒரு அர்த்தம் இருக்கும். அதேபோல் அறிவியலும் இருக்கும். ஆனால் அதைப்பற்றிய அறிவு ஞாயமா இல்லாததால் அவைகள் புறந்தள்ளப்பட்டன. தற்போது சில சடங்கு விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டு அவைகளை முறையாக செய்யத் தொடங்கி உள்ளனர்.
வெளிநாடுகளிலும் நமது பாரம்பரிய சடங்குகள் குறித்த பெருமைகள் பேசப்படுவதால் அந்த சடங்குகளுக்கான மரியாதையை நம்ம மக்களும் உணரத்தொடங்கியுள்ளனர். அந்த வகையில் மகிழ்ச்சியே.
World Milk Day 2024
அர்த்தம் அறிவோம்
திருமணம் முடித்த ஒரு பெண் பிறந்த வீட்டைவிட்டுவிட்டு ஒரு புதிய சூழலுக்குள் நுழைகிறாள். எல்லாமே அங்கு அவளுக்கு புதிது. தாய் கடிந்து பேசியதை பாசமாக எடுத்துக்கொள்ளும் ஒரு பெண் புதிய சூழலில் கணவன் வீட்டில் இதைச் சொன்னாலும் தொடக்கத்தில் புரிந்துகொள்ளமுடியாத நிலை இருக்கும். அன்பு கிடைக்கும்போது மகிழ்ந்த மனசு சிறிய அதட்டலுக்குக்கூட மனம் சங்கடப்படும் நிலை வரலாம்.
அப்படியான சூழ்நிலையில் பெண் ஒரு பசுபோல் ஆகிறாள். அதாவது பசு விஷம் நிறைந்த பொருட்களை உண்டாலும் பாலில் ஒரு துளியும் விஷம் இருக்காது.அதைப்போல கணவன் வீட்டில் மனம் நோக்கும் அளவுக்கு எது நடந்தாலும் அதற்கு இணையாக வார்த்தைகளை அவர்கள் மீது எறிந்துவிடாதே என்பதை உணர்த்துவதற்கு முதலிரவில் பால் கொடுக்கப்படுகிறது.
World Milk Day 2024
சரி ஓகே அப்ப பழம் எதுக்கு ..?
வாழை விதையே இல்லாமல் தனது தலைமுறையை வளர்க்கிறதோ அதைப்போல உன் கணவனோடு இணைந்து வாழந்து உன்ன வம்சத்தை விருத்தி செய்யவேண்டும் என்பதை உணர்த்த வாழைப்பழம் முதலிரவில் வைக்கப்படுகிறது.
அப்படின்னா முதலிரவில் பெண் மட்டுமா சாப்பிடறாங்க..? கணவனும் சாப்பிடறாரே..? பொறுமை..பொறுமை ..அதுக்கும் அர்த்தம் உள்ளது.
World Milk Day 2024
சரி முதலிரவில் கணவன் சாப்பிடும் அர்த்தத்தை பார்ப்போமா?
கணவனுக்கான அர்த்தம் : பாலுக்குள் தயிரும் நெய்யும் மறைந்து இருப்பதைப்போல் பெண்ணிடம் அறிவும் ஆற்றலும் இருக்கின்றது. ஒரு பெண்ணை எப்படி கையாளவேண்டும் என்பதை நீ அறியவேண்டும். பால் எப்படி பக்குவமாக உறையிட்டு தயிராக்கப்பட்டு பின்னர் அதை பக்குவமாகக் கடைந்து வெண்ணெய் ஆக்கி, பின்னார் அதை முறைப்படுத்தி நெய் எடுப்பதுபோல பெண்ணை நீ கையாளவேண்டும். பாலை கெட்டுப்போக வைத்துவிடக்கூடாது என்பதை ஆணுக்கு உணர்த்துகிறது.
வாழைமரம் எப்படி அதன் தாய் மரத்திலிருந்து பக்குவமாகப் பிரித்து எடுக்கப்பட்டு நடும்போது நிலத்தை வளமாக்கி நடுகிறோமோ அதைப்போல இன்னொரு வீட்டில் இருந்து வரும் பெண்ணை பரிபூரணமாக பாதுகாத்து வாழவேண்டும் என்பதை ஆணுக்கு உணர்த்துகிறது.
அறிவியல் அர்த்தம்
மேலும் அறிவியல் ரீதியாக முதலிரவில் முதன்முதலாக உடலுறவில் ஈடுபடும் தம்பதிக்கு ஆற்றல் இழப்பு ஏற்படும். அந்த ஆற்றலை மீண்டு கிடைக்கச் செய்வதில் பாலும் பழமும் பெரிதும் கைகொடுக்கும்.
இப்போ புரியுதா..?