உடல் தன்னை நடுநிலைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்..?

அதிகாலை கண் விழித்து நடை பயிற்சி செய்வதும், இரவில் சீக்கிரம் உறங்கப்போவதும் மிகவும் முக்கியம்.;

Update: 2024-07-21 05:51 GMT

சூரிய ஒளி (கோப்பு படம்)

சூரியனில் இருந்து வெளிவரும் ஒளியானது 8 நிமிடத்தில் பூமியை அடைகிறது. நமது 2 கண்களுக்குள் உள்ள கண்ணின் பாவை வழியாக அதிகாலை சூரிய ஒளியில் அடங்கியுள்ள நீலநிற ஒளிக்கதிரின் 470nm ஒளி அலையானது ஊடுருவிச் செல்கிறது. அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை வருகின்ற சூரிய ஒளிக் கதிர்கள் மூளையின்  நடுப்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியை இயங்கச் செய்கிறது. சூரிய ஒளிக் கதிர்கள் உடல்மீது படும்படியும், கண்களுக்கு நீலநிற வானத்தின் ஒளிக்கதிர்கள் தெரியும்படியான நடைப்பயிற்சி செய்யும் போது தான் பீனியல் சுரப்பி இயங்குகிறது.

பீனியல் சுரப்பியிலிருந்து மெலடினின் என்ற திரவம் சுரக்கிறது. காலை 6.00 மணிக்கு பிறகு பீனியல் சுரப்பியிலிருந்து மெலடினின் என்ற திரவம் சுரப்பது நின்று விடுகிறது. அதிகாலையில் முதல் முதலாக நமது உடலில் சுரக்கும் இந்த திரவமே மூளைக்கும், இருதயத்திற்கும், மூளைக்கும் தண்டுவடத்திற்கும், மூளைக்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது. மின்சாரம் மற்றும் மின்காந்த ஆற்றல்களை உடல் முழுவதும் உள்ள செல்களுக்கும், நரம்பு இணைப்புகளுக்கும் கிடைக்கச் செய்கிறது.

மெலடினின் என்ற திரவமே 24 மணி நேரமும் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் நடுநிலைப்படுத்துகிறது. தோலின் நுனிப் பகுதியின் உணர்வு அலைகளை மூலையானது அறிந்து கொள்ள காரணமாக உள்ளது. மனிதர்கள் ஓய்வாக உறங்கும்போது“இரவு 9.00 மணி முதல் 10.00 மணிக்குள்”உடலானது தன்னைத்தானே சரிசெய்து கொள்ள மெலடினின் என்ற திரவமே காரணமாக உள்ளது. இந்த நேரத்தில் (உறங்காமல் கண்கள் திறந்திருப்பதும், 5 WATTS க்கும் அதிகமான வெளிச்சம் உடல்மீது படும்படியாக இருப்பது) மெலடினின் திரவம் உடலினை நடுநிலைப்படுத்த தடையாகின்றது.

தினசரி உடல் ஆரோக்கியம் அனைத்திற்கும் மெலடினின் திரவ உற்பத்தியே முதல் காரணமாக உள்ளது. இதனை நமது சித்தர் பெருமக்கள் உணர்ந்து உருவாக்கியது தான் “தினசரி வாழ்க்கை முறைகள்”என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தனிமனிதர் உடல் ஆரோக்கியம் என்பது அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்யும் போதும், இரவு 9.00 மணிக்கு முன்பே உறங்குவதால் 50% அதிகமாக மெலடினின் திரவத்தினால் உருவாக்கப்படுவதாகும். "ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கை முறைகள் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்".

Tags:    

Similar News