Vetri quotes in tamil-வெற்றிக்கான இன்னொரு 'கை' நம்பிக்கை..!
வெற்றியை நமக்கு எடுத்துரைக்க முயலாமை (முயல்+ஆமை = முயலாமை) கதை போதும். ஆமை முயன்றதால் முயலைத் தோற்கடித்தது.
Vetri quotes in tamil
வாழ்க்கை என்பது சவால்கள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு பயணம். சில நேரங்களில், நாம் அனைவரும் முன்னோக்கிச் செல்ல ஒரு சிறிய உத்வேகம் மற்றும் உந்துதல் தேவை.
வாழ்வில் வெற்றி பெறவேண்டுமெனில் தன்னம்பிக்கை அவசியம். மனித வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததுதான். தோல்விகள் பல வரலாம். அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம். துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி வெற்றி கொள்ள தன்னம்பிக்கை அவசியமாகும்.நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கையே இல்லை.
வெற்றி பெற நம்பிக்கை மேற்கோள்களை பார்ப்போம் வாங்க.
வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டுமெனில் தன்னம்பிக்கை முக்கியமாகும். தன்னம்பிக்கையின்றிச் சாதனைகள் செய்திட முடியாது.
துன்பத்தை தூரமாக வைத்து, இன்பத்தை இதயத்தில் வைத்து,நம்பிக்கையை நமக்குள் வைத்தால், எல்லாம் வெற்றி ஆகும்
நம்பிக்கை எனும் ஆயுதம் உன்னிடம் இருக்கும் வரை வெற்றி என்ற வார்த்தைக்கு நீ தகுதி உடையவன்.
பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி வந்து கொண்டேதான் இருக்கும். பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள். வெற்றி உங்கள் காலடியில். முயற்சி உனதானால். வெற்றியும் உனதாகும்.
Vetri quotes in tamil
தோல்விகளைக் கண்ட இதயத்திற்குத் தான் வெற்றியின் அருமை புரியும். எனவே தன்னம்பிக்கையை விடாமல் வெற்றி பெறும் வரை போராடு.
வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பிறகும், இன்னும் ஒரு தடவை,இன்னும் ஒரு தடவை என முயற்சி செய்வது.
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால். எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும். உன் விடா முயற்சியால்.
பேராசைக்கும் லட்சியத்திற்கும் கொஞ்சம் தான் வித்தியாசம். முயற்சி இல்லாத கனவு பேராசை. முயற்சியுடன் கூடிய கனவு லட்சியம். முயற்சி திருவினையாக்கும்
Vetri quotes in tamil
நகர்ந்தால் தான் நதி அழகு. வளர்ந்தால் தான் செடி அழகு. முயன்றால் தான் மனிதன் அழகு. மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல. முயற்சி செய்பவனே மனிதன்.
எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள் வெற்றி தானாகவே நம்மைத் தேடி வரும்
சோர்வடைந்து விடாதே..! வாழ்க்கை நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களைக் கொண்டு வரும்
தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு
Vetri quotes in tamil
எவ்வளவு தான் மேகம் மூடினாலும் வெளிவரும் நேரம் வரும்போது நிச்சயம் சூரியன் தலை காட்டும். அதுபோல தான் உன் வெற்றியை யார் தடுத்தாலும் உனக்குள் இருக்கும் தன்னம்பிக்கை உனக்கு வெற்றியை பெற்றுத் தரும்.
கடக்கப் போகும் பெரும் பாதையைக் கண்டு வியக்கும் போது, கடந்து வந்த பெரும் பாதையை நினைத்து பாருங்கள். சந்தித்த சவால்களையும் சோதனைகளையும் நினைத்துப் பாருங்கள். அனைத்து அச்சங்களும் உங்களை விட்டு ஓடி விடும். உங்களால் முடியும். வெற்றி உங்களுக்கே
தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கைக் கொண்ட ஒருவனின் பார்வை எதிர் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோன்றுவதில் தவறில்லை
Vetri quotes in tamil
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான். கடமையை செய்தால் வெற்றி. கடமைக்குச் செய்தால் தோல்வி. கடமையைக் கடுமை ஆக்கி வெற்றியை நமதாக்குவோம்.
அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீ தாழ்த்திக் கொள்ளாதே உலகத்தில் சிறந்தவர் உனக்கு நீயே
உங்கள் வெற்றியின் ரகசியம், உங்களுடைய தினசரி செயல்பாட்டின் மூலமே நிர்ணயம் செய்யப்படுகின்றது.
பணத்தை விட நேரம் அதிக மதிப்புடையது ஏனென்றால் நேரம் ஈடு செய்யமுடியாதது.
Vetri quotes in tamil
எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.
விதியை எள்ளி நகைப்பவனே வெற்றிகள் பலவற்றைக் காண்பான்.
வெற்றி பெற்றபின் அமைதியாக இருப்பவன், இரண்டுமுறை வென்ற மனிதன் ஆகிறான்.
மோசமானவற்றிற்காக நான் தயாராகவே இருக்கின்றேன்; ஆனால், சிறந்தவற்றிற்கான நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.
Vetri quotes in tamil
மாறக்கூடியதை மாற்றுங்கள், மாறாததை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்.
மன வலிமையுடன் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை நல்லவிதமாகப் பயன் படுத்தவும் வேண்டும்.
நிறைய பேர் அறிவுரை பெறுகிறார்கள். ஆனால் அறிவுள்ளவர்கள் தான் அதனால் பயன் பெறுகிறார்கள்.
எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்
Vetri quotes in tamil
எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து நின்று போராடு. யார் என்ன சொன்னாலும் கவலை படாதே. உன் பாதையில் நேர்மையாக தொடர்ந்து செல். உன் வெற்றியை விதைத்து கொண்டே முன்னேறு. என்றும் நீயே வெல்வாய்.
பிடிக்காத விசயத்தை கண்டுகொள்ளாமலும், வேண்டாத விசயத்தில் கவனம் செலுத்தாமலும், தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்தால் உடலும், மனமும் ஆரோக்யமாக இருக்கும்.
உன்னை உதாசீனப்படுத்தும் உறவுகளை எதிரிகளாக நினைக்காதே. உன்னை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளாக நினைத்துக் கொள்.
வெற்றிக்கு ஆசைப்பட்டது தோல்வி. தோல்விக்கு இறுதியில் கிடைத்தது மாபெரும் வெற்றி. காரணம் முயற்சி என்ற பயிற்சியால்.