Uravugal Quotes in Tamil-இன்னலில் உதவாத உறவுகள் இருந்தென்ன பயன்?

தோழமை, சினேகம் என சிறந்த பண்புகள் வளர்வதற்கான கல்விக்கூடமாக இருப்பது குடும்ப உறவுதான். குடும்பமே உறவுகளின் பிறப்பிடம்.

Update: 2023-12-23 13:42 GMT

uravugal quotes in tamil-உறவுகள் குறித்த மேற்கோள்கள் (கோப்பு படம்)

Uravugal Quotes in Tamil

மகிழ்ச்சிகரமான வாழ்வின் அடிப்படையே குடும்ப உறவுகளாகும் என்ற வகையில் ஓர் மனிதனானவன் தனித்து வாழ்வதை விட தனது குடும்பத்துடன் வாழ்கின்ற போதே சிறந்த வாழ்க்கையை வாழ்கின்றான். குடும்பமே மனித வாழ்வின் பயிற்சி கூடமாக திகழ்கின்றது.


சொந்தம் எப்போதும் தொடர்கதைதான், அது முடிவே இல்லாதது என்று ஒரு பாடல் உள்ளது. இதை ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தால் உறவுகள் என்பது ஒருவருக்கு ஒருவர் ஏதோ ஒரு வகையில் சொந்தம் பிணைக்கப்பட்டிருக்கும். அப்படியான உறவுகளில் எது நல்ல உறவு? எது மோசமான உறவு என்பதை நாம் துன்பத்தில் இருக்கும்போது அறிந்துகொள்ளலாம்.

இப்போது உறவுகள் குறித்த மேற்கோள்களை பார்க்கலாமா?

Uravugal Quotes in Tamil

தேடி வந்த உறவை தள்ளி

விட்ட போது தெரியவில்லை.

தேடி சென்ற உறவு தள்ளி

விடும் போது புரிகிறது.

வாழ்க்கை ஒரு வட்டம் என்று...!


நமக்கு அனைத்தும் கற்றுத் தருவது

நம் வாழ்க்கை அல்ல.

நாம் அதிகமாக நேசித்த

ஓர் பொய்யான உறவு தான்.

உண்மையான உறவு என்று எதுவும் இல்லை.

உண்மையான உறவு கூட உதறிவிடும்.

உன் நிலை தாழ்ந்தால்...!

'தான்' என்ற ஆணவம் தலை தூக்காதவரை

உறவுகளில் அன்பும், உண்மையும்,

அரவணைப்பும், சகிப்புத்தன்மையும்

நிலைத்திருக்கும் நிறைந்திருக்கும்.

உறவும் சரி நட்பும் சரி வாழ்க்கையின்

ஒரு கட்டத்தில் நம்மை விட்டுச் சென்றுவிடும்.

எனவே மனைவி என்று துணைவியை

அனுப்பி வைக்கிறான் ஆண்டவன்..!

Uravugal Quotes in Tamil

உலகில் உறவு என்பது

புத்தகம்.. தவறு என்பது

ஒரு பக்கம்.. ஒரு பக்கத்திற்காக

ஒரு புத்தகத்தை

இழந்து விடாதீர்கள்..!


கோபத்திலும் உங்களை

சபிக்காத உறவு கிடைத்தால்

அவர்களை விட்டு விடாதீர்கள்

நீங்கள் சேர்த்து வைக்காத

சொத்து அவர்கள்.

வாழ்க்கையில் உயரும்

வரை காதை மூடிக் கொள்ளுங்கள்..

உயர்ந்த பிறகு வாயை

மூடிக் கொள்ளுங்கள்..!

நிறம் மாறும் பச்சோந்திகளை

விட அடிக்கடி மனம் மாறும்

மனிதர்களிடமே

அதிக கவனம் தேவை.

அன்பாக இரு அனைவரிடமும்..

அடிமையாக இருக்காதே

யாரிடமும்.

Uravugal Quotes in Tamil

சில நாள் பேசாமல்

இருந்து பார்.. பல பேர்

காணாமல் போய் விடுவார்கள்..!

உரிமை இருப்பதாக நினைத்து

பேசி வருந்துவதை விட..

உன் எல்லை அறிந்து

தொல்லை தராமல் தொலைவில்

இருப்பது நல்லது.


கிடைக்காதென தெரிந்தும்

நிம்மதியைத் தேடுகின்றோம்..

நிலைக்காதென தெரிந்தும்

உறவுகளைத் தேடுகின்றோம்..

தேடல் வாழ்க்கையென தெரிவதற்குள்

பலமுறை விழுந்து

எழ வேண்டியிருக்கின்றது.

வாழத் தெரிந்தவனிடம்

வாழ்க்கை இருப்பதில்லை..

பாசம் தெரிந்தவனிடம் உறவுகள்

இருப்பதில்லை.. உழைக்க

தெரிந்தவனிடம் காசு

இருப்பதில்லை.

Uravugal Quotes in Tamil

பணத்தை சரியான இடத்தில்

முதலீடு செய்து

ஏமாந்தவர்களை விட.. அன்பை

சரியான இடத்தில் காட்டாமல்

ஏமாந்தவர்களே அதிகம்..!


சில குற்றங்களை மன்னிப்பதாலும்

சில குறைகளை மறப்பதாலும் தான்

இன்னும் உறவுகள் நீடிக்கின்றன.

கேட்டு பெறப்படும் அன்பில்

உண்மை இருக்காது.. கேட்காமல்

கொட்டப்படும் அன்பிற்கு

மதிப்பு இருக்காது..!

Uravugal Quotes in Tamil

நமக்கு பிடித்தவர்களிடம்

உண்மையாக இருக்க வேண்டும்

என்பதில் வென்று விடுகின்றோம்..

ஆனால் அதே உண்மையை

அவர்களிடம் எதிர்பார்க்கும்

போதுதான் தோற்று விடுகிறோம்.

Tags:    

Similar News