சூரை மீன் சாப்பிட்டால் சூப்பரா வாழலாம்..! அவ்வளவு நன்மைங்க..!
Tuna Fish Benefits in Tamil-மீன் உணவுன்னா கேரளா நினைவுக்கு வராமல் இருக்காது. அவர்களின் பளபளப்பான சருமத்திற்கு இந்த மீன் உணவுதான் காரணம்.
Tuna Fish Benefits in Tamil-இன்று உலகில் உள்ள உயிரினங்களில் அதிகமான உயிரினங்கள் வாழ்வது கடலில்தான்.அவைகளில் அதிகமாக இருப்பவைகள் மீன்கள். மீன்களில் அதிகளவு புரதச்சத்து காணப்படுகிறது. அவ்வாறு அதிக நன்மைகள் காணப்படும் மீன்களில் ஒன்றாக சூறை மீன் (Tuna fish benefits in Tamil) உள்ளது.
1. உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கிறது
சூரை மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ளறுப்புக்களின் பாதுகாப்புக்கு உதவி புரிகிறது.
மேலும் அவை உள்ளுறுப்புகளில் கொழுப்பு படிதலை தடுத்து நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. இதில் ஏனைய உயிரினங்களில் காணப்படும் கொழுப்புகளை விட சக்தி வாய்ந்த கொழுப்பு காணப்படுவதால் இவை உடல் உறுப்புகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
மேலும் இவை உவர்நீர் பகுதிகளில் இருந்து பெறப்படுகின்ற மீன் ஆகையால் மனிதர்களுக்கு தேவையான உப்பு ,அயோடின் சக்தியை கொண்டுள்ளது. இதனால் தொண்டை தொடர்பான பிரச்சினைகள், அயோடின் குறைபாட்டால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
2. இதயத்தை பாதுகாக்கிறது
இதயங்களில் காணப்படும் நரம்புகள்,நாளங்கள் போன்றவற்றில் பல்வேறு கொழுப்புத் தன்மை சேரும்போது அது அடைப்புக்குள்ளாகி உயர் அழுத்தம் மற்றும் இதய அடைப்பு போன்ற வியாதிகளை உருவாக்குகிறது.
இவற்றுக்கு சிறந்த தீர்வாக சூரை மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கொழுப்பை கரைக்க கூடிய விட்டமின்கள் காணப்படுவதனால் அவை நரம்பு,நாளங்களில் இலகுவாக ஊடுருவிச்சென்று இதயங்களை பாதுகாக்க உதவுகிறது.
இதய நோயாளிகள் வாரத்தில் ஒரு முறையாவது இதனைச் சாப்பிட்டு வருவது உடலுக்கு சிறந்த பயனளிக்கும். மேலும் இதய ஆரோக்கியத்துக்கு சூரை மீனை சமைத்து பயன்படுத்துவது சிறந்த பயன்தரும்.
3. சருமப் பிரச்னைகளைக் குணப்படுத்த
நம்மில் அதிகமானவர்கள் வெயிலின் தாக்கத்தாலும் பல்வேறு ரசாயன பொருட்களின் பயன்பட்டாலும் சருமப் பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். இதனால், தோலில் அரிப்பு, அலர்ஜி(allergy) ,தோல் முடி உதிர்தல் போன்ற பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாகி இருக்கின்றோம்.
இதற்கான முக்கிய காரணம் உணவில் போதுமான அளவு சத்துக்கள் இல்லாததேயாகும். இதைப்போன்ற பிரச்னைகளை தடுக்க சூரை மீன்களில் காணப்படும் விட்டமின்கள், நிறைவுற்ற கொழுப்பு போன்றவை உள்ளன. அதாவது விட்டமின் டி ,பி ,ஏ போன்றவை காணப்படுவதனால் தாவரங்களிலிருந்து கிடைக்கக் கூடிய சக்திகள் போன்று இந்த மீன்கள் மூலமாகவும் கிடைக்கின்றன.
4. உடல் எடை குறைய உதவுதல்
மீன்களில்காணப்படுகின்ற குறைந்தளவான கொழுப்புச் சத்து காரணமாகவும் உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் காரணமாகவும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை உணவாக எடுத்துக் கொள்ளலாம். சூரை மீனை உணவாக எடுத்துக்கொள்ளும் போது எந்தவிதமான கொழுப்புக்களும் உடலில் சேராமல் உடல் எடையைக் குறைக்க உதவும்.
5. நோய் எதிர்ப்பு சக்தி கூடுதல்
பொதுவாக மீன்கள் அதிக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட வகையாகும்.ஏனெனில் மீன்களில் காணப்படுகின்ற சத்துக்கள் ஒருபோதும் உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
இதனால் மீன்களில் (Tuna fish benefits in Tamil) காணப்படும் சத்துக்கள் தேவையான சக்தியை அதிகரித்துக் கொள்கின்றது. மீன் சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
6. எலும்பு தொடர்பான பிரச்சினை தீர்க்கிறது
சூரை மீன்களில் (Tuna fish benefits in Tamil) காணப்படும் வைட்டமின் டி ,பி சத்துக்கள் எலும்பு ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதில் இருந்து முற்றிலுமாக துணைபுரிகிறது.
அதாவது மூட்டுகளில் ஏற்படுகின்ற வலி, மூட்டு விலகல் மற்றும் எலும்பு பலவீனம் போன்றவற்றை தீர்க்க உதவுகிறது.
7. சரும பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு
பொதுவாகவே மீன்களில் காணப்படுகின்ற வைட்டமின்கள், கனிம உப்புக்கள் போன்றவை சரும பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்குகிறது. அதாவது சருமத்தில் ஏற்படும் சிறிய கொப்புளங்கள், அரிப்புகள் மற்றும் முகப்பருக்கள் போன்றவற்றை தடுத்து சருமத்தை பொலிவாக மாற்ற உதவி புரிகின்றது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2