தியேட்டர்ல நடக்கும் இம்சைகள்! கொந்தளிக்கும் சாமானியன்....!
தியேட்டர்ல படம் பாக்க போறப்ப நம்ம செய்ய கூடாத விசயங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க.;
இப்படி ஒரு சாமானியன் எழுதிய காமெடியான ஒரு பதிவினை பார்க்கலாம். நம்மல்ல நெறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கும்னு நம்புகிறேன். ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க வந்தா என்ன செய்யனும் என்ன செய்ய கூடாதுன்னு இந்த மனிதர்களுக்கு தெரியவே மாட்டேங்குது. இதுல படிச்சவன் படிக்காதவன்ற வேறுபாடே இல்லாம இருக்கானுங்க. ஒன்றரை வயசு இருக்குற குழந்தைய தூக்கிட்டு வரானுங்க. அது டைட்டில கார்ட் போட்ட உடனே அழ ஆரம்பிச்சுடுது. அத சமாதானபடுத்தி தூங்க வைக்குறதுக்குள்ள 15 நிமிஷம் காலியாகிடுது. ஏண்டா வெளிச்சமே இல்லாத High Volume தியேட்டர்ல ஒரு குழந்தை எப்படி இருக்கும்னு யோசிக்கிற அறிவே இருக்காத உங்களுக்கு. தியேட்டர் உள்ள டிரிங் அண்ட் ஸ்மோக் தடை செஞ்ச மாதிரி வயது இல்லாத குழந்தைகள் தூக்கிட்டு வரதயும் தடை செய்யனும்..
அடுத்த இவனுங்க.. ஃபர்ஸ்ட் ஷோவே 11 மணிக்கு இதுல உள்ள வந்து உக்கார்ந்து டைட்டில் கார்ட் முடிய இன்னும் 5 நிமிஷம் ஆகும். நீ 9 மணி வரைக்கும் தூங்கி எழுந்து வந்தாலே கரெக்ட் டைமிங் வந்துடலாம். ஆனா ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பத்து பேர் படம் போட்டு 15 நிமிஷம் கழிச்சு தான் வரானுங்க. அதுல மொபைல் டார்ச்ச வேணும்னே மூஞ்சுல அடிச்சு படம் பார்க்க விடாம பண்றானுங்க.
அடுத்து... தியேட்டர் வந்தா சத்தமா ஃபோன் பேச கூடாது, ஃபோன் யூஸ் பண்ண கூடாது, கால் வந்துச்சுன்னா Mute ல போடனும்ங்குறது அடிப்படை அறிவு. இதுகூட இல்லாம ஒருத்தன் மெசேஜ் பண்றான், ஒருத்தன் ஃபோன் பேசுறான், இன்னொரு பைத்தியம் Free Fire கேம் விளையாடுறான், சும்மா இருக்க ஃபோன நிமிஷத்துக்கு ஒரு தடவை எடுத்து பார்க்குறான், உள்ள வைக்கிறான், பிரைட்னஸ் கூட குறைக்காம ஃபோன் நோண்டிட்டு உக்கார்ந்து இருக்கான். சம்பந்தமே இல்லாம வெளிய போறான், உள்ள வரான், சில பேர் வெளியேவும் போகாம உள்ளேயும் வராம கதவ தொறந்து தலைய வெளிய வச்சி உடம்ப உள்ள வச்சி ஃபோன் பேசுறான். போயி ரெண்டு மிதி மிதிக்கலாம்னு தோணும்.
அதுலயும் ஒரு பூமர் ஃபோன் வந்துகிட்டே இருக்கு எடுத்து அட்டன் பண்ணவும் மாட்றான், கட் பண்ணி உள்ள வைக்கவும் மாட்றான் ஃபோன தூக்கி கை வச்சி டிஸ்ப்ளேயவே பார்த்துட்டு இருக்கான். ஃபோன ஆஃப் பண்ணுங்க சார்ன்னு சொன்னதும் எதோ அவன் பொண்ண கட்டிகொடுன்னு கேட்ட மாதிரி மொரச்சிட்டு உள்ள வைக்கிறான்.
இவனுங்க ஏன் இப்படி இருக்கானுங்க. அவ்வளவு பிசியா இருந்தா நீங்க ஏண்டா படம் பார்க்க வரீங்க. வீட்லயே உக்கார வேண்டியதுதான . வந்து அடுத்தவன் உயிர எடுக்குறீங்க... இத படிச்சதும் சிரிப்பு தான் வந்தது. அதனால் தான் நம்ம வாசகர்களும் சிரிக்கட்டுமே என பதிவிட்டுள்ளோம்.