என்னது துவரம்பருப்பில் இவ்ளோ நன்மைகளா..? தெரிஞ்சுக்கங்க..!

Toor Dal in Tamil Image-நமது தமிழ்நாட்டு சமையலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஒரே பருப்பு துவரை.;

Update: 2023-01-25 10:50 GMT

Toor Dal in Tamil Image

Toor Dal in Tamil Image-உலகெங்கிலும் எத்தனையோ வகை பருப்பு வகைகளை மனிதன் பயிரிட்டு வளர்க்கிறான். இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல்நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சத்துகளை கொண்டதாக இருக்கிறது. இதில் நம் நாட்டு சமையலில் அன்றாடம் இடம்பெறும் துவரம் பருப்பு பல பயங்களைத் தரக்கூடியது. துவரம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்ய நன்மைகளை பார்ப்போம் வாங்க.

துவரம் பருப்பில் சிறந்த அளவிலான புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுவதை தடுக்கிறது.

துவரம் பருப்பு பயன்கள்

உடல் எடை கூட

ஒரு சிலருக்கு அதிக சதைப்பற்று பிடிப்பு ஏற்படாமல் மெலிந்த தேகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் உடல்வாகு பெருக்க துவரம் பருப்பை வேகவைத்து பின்னர் பசு வெண்ணெயில் வதக்குவதுபோல கிளறி எடுக்கவேண்டும். பின்னர் அரிசி சாதத்துடன் இதை கலந்து பசு நெய்யுடன் பிசைந்து சாப்பிடுவதால் மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடலுக்கு வலிமையும் கிடைக்கும்.

இரத்த அழுத்தம் குறைய 

நடுத்தர வயதானவர்களுக்கு இரத்த அழுத்தம் ஒரு முக்கிய பிரச்னையாக ஏற்பட்டு வருகிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. இது இரத்தக் குழாய் விரிப்பானாக‌ச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது. எனவே இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்துக் கொண்டால் இரத்த அழுத்தம் தீரும்

ஆரோக்ய வளர்ச்சி

உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமானது புரதச்சத்து. துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள் மற்றும் தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே, குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது நலம் பயக்கும்.

காயங்கள் ஆறும்

எப்போதாவது அடிபட்டு காயங்கள், புண்கள் ஏற்படுவது சகஜம் தான். இத்தகைய காயங்கள் வெகு விரைவில் ஆறுவதற்கு புரதச் சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே, துவரம் பருப்பை உணவில் அடிக்கடி சாப்பிடுவதால் மேற்கண்ட பலன்களை பெறலாம்.

ரத்த சோகை

வளரும் நாடுகளில் பிறக்கும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடு, இரத்த சோகை. இரத்தத்தில் ஃபோலேட்டுகளில் ஏற்படும் குறைபாட்டினால் ரத்த சோகை ஏற்படுகிறது. துவரம் பருப்பில் அபரிதமான ஃபோலேட்டுகள் உள்ளன. எனவே, வளரும் நாடுகளில் குழந்தைகளிடம் காணப்படும் அனீமியா எனப்படும் இரத்த சோகைக்கு துவரம் பருப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

வீக்கம், அழற்சி

எதிர்பாராதவிதமாக அடிபடும் போது சிலருக்கு உடலில் அடிபட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படுகிறது. மேலும் இது தீவிரமடைந்து அழற்சியும் உண்டாகிறது. துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சித் தன்மையையும் அதிகம் கொண்டுள்ளன. மேலும் அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தக்கட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குணமாகும்.

நோய் எதிர்ப்புச் சக்தி

எத்தகைய நோய்களும் நம்மை அணுகாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமிகுதியாக இருக்க வேண்டும். துவரையில் உள்ள வைட்டமின் 'சி' சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.

இதய நலம்

உலகெங்கிலும் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே, துவரம் பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கச் செய்கிறது.

toor dal in tamil

செரிமான சக்தி

நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும் நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

உடல் எடை குறைய

இன்று பலருக்கும் இருக்கும் தலையாய பிரச்னை அதீத உடல் எடை. உடல் எடை குறைக்க சரியான உணவுகள் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News