Thanimai quotes in tamil-வாடும் எனது வலி உனக்குப்புரியுமா..? தனிமையின் வேதனை..!

வெந்து தணிந்த காட்டுக்குள் வெப்பத்தின் அனல் இருப்பதுபோல வேதனை சுமந்த உள்ளத்துக்குள் குமுறலும் வலியும் குவிந்து துன்புறுத்தும்.

Update: 2023-09-04 11:15 GMT

Thanimai quotes in tamil-தனிமையின் வலி மேற்கோள்கள் (கோப்பு படம்)

Thanimai quotes in tamil

தனிமை என்பது வேதனையின் வெளிப்பட்டால் வருவது. தனிமை பல சிக்கலான மன நிலைக்கு வழிவகுக்கும். சொல்லாமல் அழும் குழந்தைபோல அடம்பிடித்து அடக்கிக்கொள்கிறது வெளிப்படாத அழுகையை. கண்ணுக்குள் தெரிந்துவிடுகிறது தனிமையின் வலி.

குறிப்பாக காதலின் தோல்வியால் வரும் வேதனை இருபக்க கத்திபோல கிழித்து துன்புறுத்தும். எதையும் தாங்கும் இதயம் என்று பேசிய இதே வாய், காதல் தோற்றவுடன் துவண்டு அழும். உலகமே விடியாததாகத் தோன்றும்.


இதோ வேதனை வெளிப்படுத்தும் உணர்வுக் கொதிப்புகள்:

தனிமை என்பது தவிப்பு. துணையை தேடும் துடிப்பு..!

வாழ்க்கையின் பாதி பயணத்தில் திரும்பி பார்த்தேன். உடன் வந்து கொண்டு இருப்பது என் நிழல் மட்டுமே.

ஏன் என்று யோசித்தேன் பணம் என்று தோன்றியது. பணம் இல்லை என்றால் பிணம் தானோ மனிதம்..?

ஒருவனுக்கு ஒருத்தி என்று எழுதி வைத்த இறைவன். அந்த ஒருத்தியை தவிர அனைவரையும் காட்டிவிட்டான் கண் எதிரே..!


Thanimai quotes in tamil

வாழ்க்கை என்னும் வரைபடத்தில் சந்தோஷம் என்னும் நதியை தொலைத்து. கவலை என்னும் தீவில்,

கரை ஒதுங்கி நிற்கிறேன். ஒரு தனி மரமாக..!

தனிமையை நினைத்து கவலை கொள்ளாதே. தனிமைதான் உலகத்தையும் வாழ்க்கையையும் புரிய வைக்கும், புத்தகம்..!


Thanimai quotes in tamil

சிலர் எட்டி உதைத்த பிறகும். பலர் விட்டு விலகிய பின்பும். ஆறுதலுக்கு எவரும் இல்லை என்று ஆன பிறகும்.

நீ என்னோடு வா என்று அழைக்கும் ஓர் உறவென்றால் அது தனிமை மட்டுமே.

நெடுஞ்சாலை கூட கண்ணீர் வடிக்கிறது. உன் கை கோர்த்து நடந்த சாலையில், நான் தனிமையில் நடப்பதை கண்டு..!

உன்னை சுமந்து நெஞ்சில், வேறு ஒருவரை சுமக்க விரும்பாமல், உன் நினைவுகளை மட்டுமே சுமப்பதால், தனிமை எனக்கு சொந்தமாகிப் போனது..!

தனிமை கொடுமை தான். இருந்தாலும், அதில் காயம் இல்லை. காயப்படுத்த யாரும் இல்லை. என்பதால், அது இனிமை தான்...!


Thanimai quotes in tamil

உரிமையோடு சிலரை உறவென்று நினைத்தது தவறென்று புரிந்த போது. தனிமை உரிமை ஆனது..!

யார் சொன்னது நான் தனிமையில் வாடுகிறேன் என்று..? நான் ஒன்றும் தனிமையில் வாடவில்லை. நான் உன் நினைவுகளுடன் வாழ்கிறேன் தனிமையில்..!

ஓ என்று தனிமையில் அழ வேண்டும் போல் உள்ளது.நேசம் வைத்து மோசம் போன மனதுக்கு. பிறரிடம் சொல்லி அழ, தனிமையை எண்ணி, தனிமையை அள்ளி, தனிமையிடம் சொல்லி அழ வேண்டும்.

இனி யாரையாவது நேசிப்பாயா என்று..?

காதலை காதல் செய்தேன். தனிமையே பரிசானது. தனிமையை காதல் செய்தேன். அது தந்த பரிசு இந்த கவித்துவ வரிகள்..!

தனித்து இருப்பதே தனி சுகம் தான். நிழலோடு பேசிக் கொண்டு நீண்ட தூரம் போகலாம். கற்பனைக்கு உயிர் கொடுத்து கவிதை கிறுக்கலாம். யாரும் அறியாத நினைவை திறந்து பார்த்து ரசிக்கலாம். நம்முள் நம்மை தேட. நிச்சயம் தனிமை சிறந்தது..!



Thanimai quotes in tamil

தனிமையை பகிர்ந்திட துணையொன்று தேடினேன். இணைகொண்ட மனங்களும் துணை வர தயங்கவே. துணிந்தே ஏற்க்கின்றேன் தனிமையை துணையென...!

வாழ்க்கையில் ஒரு நாள் தனிமையே பல பாடங்களை கற்றுத் தருமனால்.. நான் என் வாழ்நாள் முழுவதையும் தனிமையிலே வாழ விரும்புகின்றேன்.

தனிமையில் எனக்கு இனிமை இல்லை என்றாலும்..அதில் துன்பங்கள் இல்லை. என்பதை உணர்த்த மறுப்பதில்லை தனிமை..!

தனிமை மிகவும் வித்தியாசமானது நாமே. அதை எடுத்துக் கொண்டால் ரொம்ப இனிமையாக இருக்கும். தனிமையை மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் அது கசக்கும்..!


Thanimai quotes in tamil

தனிமை என்பது யாருமில்லாமல் இருப்பது அல்ல. நம்மை சுற்றி எல்லோரும் இருந்தாலும் நமக்காக யாருமில்லை என்று உணருவதே.. தனிமை..!

பல உறவுகளால் தரமுடியாத ஆறுதலையும் நிம்மதியையும் சில நேரம் தனிமை தந்துவிடும்.

தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை.

தூக்கம் வந்தாலும் தூங்காமல் நமக்கு பிடித்தவர்களை தனிமையில் நினைத்துக்கொண்டு இருப்பதும் ஒரு தனி சுகம் தான்..!


Thanimai quotes in tamil

பேச யாரும் இல்லை என்பதை விட பேசுவதைக் கேட்க யாருமில்லை என்பது தான் தனிமையின் கொடூரம்..!

இன்று நானும் தனிமையில்.. நான் காட்டிய அன்பும் தனிமையில்.. என் வாழ்வும் தனிமையில்..!

தனிமை என்பது நான் தேடிக்கொண்ட சாபம் அல்ல. நான் என் உயிருக்கும் மேலாக நேசித்தவர்கள் எனக்கு அளித்த பரிசு.

உரிமையோடு சிலரை உறவென்று நினைத்தது தவறென்று புரிந்து கொண்டேன். மீண்டும் தனிமையே போதும் என்று விலகிக் கொண்டேன்.

Tags:    

Similar News