குழந்தையை தூங்க வைக்க இதோ இனிமையான தாலாட்டு..! பாடி தூங்க வைங்க..!
Thalattu Padal Tamil-'தாலாட்டுப் பாடவா தாய்போலவே..?' என்பதில் இருந்தே இது தாய்ப்பாடும் தாலாட்டு என்பதை இலகுவாக புரிந்துகொள்ளலாம்.;
thalattu padal tamil-தாலாட்டு (கோப்பு படம்)
Thalattu Padal Tamil-குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும், அவர்களை மகிழ்விக்கவும், தூங்கவைக்கவும், பெண்களால் பாடப்படும் பாடல்கள்தான் தாலாட்டுப் பாடல்கள். ‘தால்’ என்றால் நாக்கு என்று பொருள். நாக்கினை ஆட்டி 'ரா.. ரா..ரா.. ரா.., லு.. லு ..லு.. லு.. என்று தொடங்கி பாடுவதால் இது தாலாட்டு என்று பெயர் பெற்றது என்றும் கூறுவது வழக்கம்.
மக்கள் வழக்கில் ஆராட்டு, ரோராட்டு, தாலாட்டு, ஓராட்டு, தாராட்டு, தொட்டிப் பாட்டு, தூரிப்பாட்டு என்று தாலாட்டுப்பாடலை பலவாறாகச் சொல்கிறார்கள். பாடலின் தொடக்கத்தில் இடம் பெறும் ஒலிக்குறிப்புச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
தாலாட்டுப் பாடல்
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சராரு
கற்பகத்தைத் தொட்டாராரு
தொட்டாரைச் சொல்லியழு
தோல் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மல்லி பூ சென்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே
கண்ணே நீ கண்ணுறங்கு
கண்மணியே நீ உறங்கு..!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு
நானாட்ட நீ தூங்கு..!
நாகமரம் தேரோட..
தேரு திரும்பி வர..
தேவ ரெல்லாம் கை யெடுக்க,
வண்டி திரும்பி வர,
வந்த பொண்கள் பந்தாட
வாழப் பழ மேனி
வைகாசி மாங்கனியே
கொய்யாப் பழ மேனி!- நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே..
வாசலிலே வன்னிமரம்..
வம்மிசமாம் செட்டி கொலம்..
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு..!
சித்திரப் பூ தொட்டிலிலே
சீராளா நீ தூங்கு..!
கொறத்தி கொறமாட
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல..
வேதஞ் சொல்லி வெளியே வர
வெயிலேறி போகுதையாararo
மாசி பொறக்கு மடா
மாமன் குடி யீடேற..
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு..!
ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்..
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகைப் பார்த்து அரண்டார்களே..!
அத்திமரம் குத்தகையாம்
ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்.
பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்.
உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு’
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே...!
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2