தமிழில்ல ஒரு வரியில் அர்த்தம் சொன்னா..நூறு அர்த்தம் சொன்ன மாதிரி..!

Tamil Language Quotes in Tamil-தமிழ் மூத்தமொழி. அழகு மொழி. அர்த்தமுள்ள மொழி. வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்புகள் உள்ள மொழி.

Update: 2022-09-11 08:49 GMT

Tamil Language Quotes in Tamil

Tamil Language Quotes in Tamil-மனிதர்களின் முதல் அடையாளம் தாயும் தந்தையும். அதிலும் முதலில் நிற்பது தாய். அடுத்து நிற்பது மனிதன் வாழும் பிரதேசம் அதாவது எந்த நாடு என்ற அடையாளம். அதில் முந்தி நிற்பது தான் மொழி ஒருவரது அடையாளம். அதில் தமிழ் மொழி தனி அடையாளம் மிக்கது. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணேன் என்றான், மீசைக்கவி பாரதி. அந்த இனிய தமிழில் ஒரு வரியில் அழகான மேற்கோள்கள்..உங்களுக்காக..!

  • போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்.
  • வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும்.
  • வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.
  • தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்ப்பதில் தவறில்லை.
  • ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்.
  • நோயும் கடனும் எதிர்பார்ப்பும் இல்லாதவனின் தூக்கம் மிகவும் சுகமானது.
  • அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்.
  • சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்.
  • இழப்புகள் தான் பல வலியையும் சில வலிமையையும் தருகின்றன.
  • தெளிவாக செய்யாத காரியங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதில்லை.
  • அன்பு செய்யும் ஒருவனால் தான் பிறருடைய அன்பை உணர முடியும்.
  • அளவில்லா அன்பு இருந்தாலும் அளவோடு கொடுத்தால் தான்.. மதிப்பு இருக்கும்.
  • நடக்காத.. கிடைக்காத.. ஒன்றின் மீது தான் ஆசை அதிகமாக வருகிறது.
  • துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.
  • யாரையும் நம்பாதே.. இந்த உலகில் தேவை இல்லாமல் யாரும் பழகமாட்டார்கள்.
  • கண்டும் காணாமல் சென்று விடுங்கள் பார்த்தும் பார்க்காமல் செல்பவர்களை.
  • ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாக யோசித்தால் நம் எதிர்பார்ப்பே தவறு என்று புரியும்.
  • முடிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் முயன்று பார்க்க மட்டும் தயங்காதீர்கள்.
  • யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு. அது தெரியாதவரை அனைவரும் நல்லவர்களே.
  • தவறவிட்டதை திரும்ப பெற முடியாது.. வாய்ப்பாக இருந்தாலும் வாழ்க்கையாக இருந்தாலும்.
  • இல்லாத போது தேடல் அதிகம்… இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்.. இதுதான் வாழ்க்கை.
  •  எண்ணமும், பேச்சும், செயலும் ஒரே மாதிரி இருந்தால்… வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • அழகாய் பேசும் பல வரிகளை விட.. அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்.
  • தாமரை இலையை போல இரு. தேவையில்லாத சிந்தனைகளை மனதில் ஓட்டிக்கொள்ளாதே.
  • ஆண்களின் கண்ணீருக்கு வலி அதிகம், பெண்களின் கண்ணீருக்கு வலிமை அதிகம்.
  • அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல.
  • தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்.
  • அறியாத வயசு அறிய வைத்தது பசி.
  • எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்.
  • ஆசை இல்லா மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கைவாழ.
  • பொம்மையும் உயிர் பெறுவதே குழந்தைகளிடம் மட்டும்தான்.
  • கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு தினமும் போடுகின்றோம் வேஷம்.
  • வாழ்க்கை சொர்க்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே.
  • அழுகை கூட அழகு தான் குழந்தைகளிடம் மட்டும்.
  • நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.
  • நாம் அழுதால் மற்றவர்களும் அழவேண்டுமென்று நினைப்பது சுயநலத்தின் உச்சம்.
  • அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே.
  • மனம் பணத்தை அதிகம் நேசித்தால் நிம்மதி போய்விடும்.
  • எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும         


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News