Tamil Mokkai Kelvi-மொக்கையா கேள்வி கேட்டா எப்டீ இருக்கும்? இப்டீத்தான்..!
சிரிப்பு என்பது மனிதனுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அந்த சிரிப்பை சிலரிடம் காசுகொடுத்தாலும் கூட கிடைக்காது. சிரிப்பு முக்கியம்ங்க.;
Tamil Mokkai Kelvi
நாம் சிரிப்புக்காக என்னெவெல்லாம் செய்கிறோம் என்பதற்கு இப்படியான கேள்வி பதிலும் ஒன்றாகும். மனிதனின் அற்புத உணர்வுகளில் ஒன்று சிரிப்பு. ஒவ்வொரு நொடியிலும் ஒரு மனிதன் சிரிக்கும் சிரிப்பு அவனது வாழ்நாளை நீட்டுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சிரிப்புக்கு ஆரோக்யம் வளர்க்கும் அற்புத சக்தி உள்ளது.
Tamil Mokkai Kelvi
ஒருவரை சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. எத்தனையோ நடிகர்கள் தங்கள் உண்மை வாழ்க்கையில் அழுபவர்களாக இருப்பார்கள். ஆனால், சினிமாவில் பிறரை சிரிக்க வைப்பார்கள். தனக்குள் ஆயிரம் சோகங்கள் இருந்தாலும் பிறரை சிரிக்க வைப்பதற்கு அவர் எடுக்கும் முயற்சி போற்றுதலுக்கு உரியது. ஏனெனில் தான் சிரிக்காவிட்டாலும் கூட பிறரை சிரிக்க வைக்க அவர் செய்யும் தியாகம்தான் அவரது நடிப்பு.
Tamil Mokkai Kelvi
நம்மில் பலர் சிலநேரங்களில் என்ன கேள்வி கேட்கிறோம் என்பது தெரியாமலேயே கேட்பார்கள். அது சிலநேரங்களில் சிரிப்புக்குரியதாக அமைந்துவிடும். அப்படியான சில மொக்கையான கேள்விகளும் பதில்களும் உங்களுக்காக தரப்பட்டுள்ளது. படித்து வாய்விட்டு சிரிங்க.
ரொம்ப நாள் உயிர் வாழ என்ன பண்ணனும்
விடை: அதற்கு சாகாம இருக்கனும்.
பல்லு வலிக்கு முக்கியமான காரணம் என்னனு தெரியுமா ?
விடை: பல்லு தான்.
ஒரு பையன் ஸ்கூல் ஓபன் பண்ணியும் போகவே இல்லை ஏன் தெரியுமா
விடை: ஏன்னா அவன் காலேஜ் படிக்கிறான்.
ஒருத்தன் ஊதுபத்தி ஸ்டான்ட் முழுங்கிட்டான் ஆனா அவனுக்கு ஒன்னும் ஆகல ஏன்?
விடை: ஏன்னா அவன் சாப்பிட்டது வாழை பழத்தை.
Tamil Mokkai Kelvi
சார் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் ?
விடை: நோயோடதான்.
ஏன்டா ஃபார்முலால்லாம் கைல எழுதி வெச்சு இருக்க?
விடை: எங்க டீச்சர் தான் எல்லா ஃபார்முலாவும் பிங்கர் டிப்ஸ்ல வெச்சு இருக்கணும்னு சொன்னாங்க.
ஏம்மா அவர உலக்கையால அடிச்சு கொன்ன?
விடை: உரலை தூக்க முடியல சார்.
காதலிக்கறவங்க ஏன் எப்ப பாத்தாலும் பொய்யே பேசுறாங்க ?
விடை: ஏன்னா அவங்க தான் மெய் மறந்து காதலிக்கிறாங்களே.
Tamil Mokkai Kelvi
ஒருத்தன் தினமும் இரவில் தலைக்கு அடில dictionary book வெச்சு தூங்குறானாம் ஏன் ?
விடை: ஏன்னா அவனுக்கு தினமும் நைட் அர்த்தமில்லாத கனவு வருதாம்
ஒரு கிணத்துல கல்ல போட்டால் அது ஏன் முழுகுது தெரியுமா?
விடை: ஏன்னா அதுக்கு நீச்சல் தெரிலையாம்
எங்க அம்மா சர்க்கரை டப்பால உப்பு னு எழுதி வெச்சாங்க ஏன்?
விடை: எல்லா எறும்பையும் ஏமாத்துறதுக்கு
ஒரு போலீஸ் தேங்காயை ஒடச்சி ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு போனாராம், ஏன் ?
விடை: ஏன்னா அங்க போய் கைதியை துருவி துருவி கேள்வி கேக்க
Tamil Mokkai Kelvi
ஒருத்தர் எப்ப பாரு ஊருக்குள்ள கட்டையோட சுத்திட்டு இருந்தாராம் ஏன் தெரியுமா ?
விடை: அவரு ஒரு கட்ட பிரம்மசாரியாம்
நண்பா 100 ரூபாய் இருந்தா குடு
என்கிட்டே சுத்தமா இல்லடா
பரவலா குடு நான் சுத்தம் பண்ணிக்கிறேன்.
நம்ம டீச்சர்க்கு என்ன ஆச்சு?
ஏன் கேக்குற?
திருக்குறளை போர்டுல எழுதிட்டு அவங்களே இதை எழுதினது யாருனு கேக்கறாங்க.
Water இல்லாத Ocean எங்கே இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்.
வேற எங்க! Mapல தான்.
Tamil Mokkai Kelvi
ஆமாம் தயிர் ஏன் Whiteஆ இருக்கு?
என்னா அது தோய்ய (க்க)ரதால
ஆமாம் நாம எல்லாம் எதுக்கு Watch காட்டுறோம்னு தெரியுமா?
Time பார்க்க தான்.
அதுதான் இல்லை.ஓடற வாட்ச் நம்மக்கிட்ட இருந்து ஓடிறக்கூடாதுன்னு.
நம்ம தமிழ்நாட்டுல எந்த ஆத்துக்குள்ள மீன் பிடிக்க முடியாது? சொல்லுங்க பார்ப்போம்
ஐயர் ஆத்துல தான்.
சென்னை கடற்கரையிலே வீடு கட்டுனா என்ன ஆகும் சொல்லுங்க பார்ப்போம்….
ஒன்னு ஆகாது காசுதான் செலவு ஆகும்.
Tamil Mokkai Kelvi
உங்க பேனாவை வெச்சி எல்லா எழுத்தையும் எழுதலாம் ஆனா ஒரு எழுத்தை எழுத முடியாது? அது என்ன எழுத்து சொல்லுங்க பார்ப்போம்.
வேற என்ன தலை எழுத்து தான்.
ஒருத்தன் எப்ப பார்த்தாலும் கதவை மூடிட்டு தான் மருந்து குடிக்கிறாரு ஏன்?
ஏன்னா டாக்டர் தான் அறை மூடி மாத்திரை குடிக்கச் சொன்னாராம்.
இந்த உலகத்திலே பல் டாக்டர்க்கு தான் அதிகம் சொத்து இருக்கும் ஏன்?
ஏன்னா அவர்தானே அதிக சொத்தை புடுங்குறாரு.(பல் சொத்தை)
Tamil Mokkai Kelvi
ஏதோ பண்டிகைன்னா ஏன் வாழைமரம் கட்டுறாங்கனு தெரியுமா?
ஏன்னா வாழைமரத்தை கட்டலைன்னா, அது கீழே விழுந்துடும்ல. அதுதான் காட்டுறாங்க.
கடிகாரம் வாங்க ஒருத்தன் கடைக்குப் போனான். அப்போ அந்த கடைக்காரருக்கிட்ட எந்த கடிகாரம் சரியா Time காட்டும்னு கேட்டானாம். அதுக்கு அந்த கடைக்காரரு என்ன சொல்லி இருப்பாரு தெரியுமா?
தம்பி, எந்த கடிகாரமும் நேரத்தை காட்டாது. நம்மதான் பார்த்துக்கணும்.
என்னதான் நீங்க பெரிய வீரனாக இருந்தாலும்
குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியுமா?
ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி மின்விசிறியை நிறுத்திவிட்டு சாப்பிட்டான் ஏன்?
ஏன்னா அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிடச் சொன்னாராம்.
எல்லா பிரியாணிக்கும் Test வெச்சா எந்த பிரியாணி Fail ஆகும்?
முட்டை பிரியாணி (0 பிரியாணி )
ஒருத்தர் அவரோட டிரைவிங் லைசென்ஸ்ஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்?
ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்.
தண்ணி ல இருந்து ஏன் கரண்டு(தற்போதைய) எடுக்கறாங்க ஏன்?
ஏன்னா கரண்ட்ல இருந்து தண்ணிய எடுக்க முடியாது அதான்.
லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
Letterஐ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிட்டு கிழிப்போம்.
Tamil Mokkai Kelvi
மிகவும் நீளமான இசைக்கருவி எது?
புல்லாங்குழல் (full-long-குழல்)
ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்?
ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம்.
The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு ஏன்?
ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.
Tamil Mokkai Kelvi
Costlyஆன கிழமை எது?
“வெள்ளி” கிழமை
ஏலிய என்ன பண்ண யானை ஆகலாம்?
எலிக்கு ஒரு பண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும்.
“தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்
4 மாசம் தான் வித்தியாசம்
குடிக்க முடியாத டீ எது?
கரண்டி
Tamil Mokkai Kelvi
கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
ஆட்டு இறைச்சி
டயபர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
இருவரும் அடிக்கடி மாற வேண்டும்
வேலைக்கு போற விலங்கு எது?
பனி(ணி) கரடி.
Tamil Mokkai Kelvi
நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்?
நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.
கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
அதுகிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்.