tamil jokes-சிந்திக்கத் தெரிந்த மனிதன் செய்யும் அற்புத செயலே சிரிப்பு..! சிரிக்கத் தெரியாதவர் மனிதர் அல்லர்..!
tamil jokes-வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள். சிரிப்புக்கு அவ்வளவு வலிமை உள்ளது. அதனால் வாங்க சிரிப்போம்...!;
tamil jokes-நகைச்சுவை என்றாலே எல்லோருக்கும் மனதில் மகிழ்ச்சி தானாக வந்துவிடும். அந்த அளவிற்கு ஜோக்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான ஒன்று. மனது அமைதியின்றி தவிக்கும்போது நண்பர்கள் ஏதாவது நகைச்சுவையாக பேசி நம்மை சிரிக்கவைக்க முயற்சி செய்வார்கள். ஏனென்றால் வாய் விட்டு சிரித்தாலே பல நோய்கள் கூட வராது. நமது வாசகர்களுக்காக பிடித்த பல நகைச்சுவைகள் கீழே தரப்பட்டுள்ளன. படித்து,சிரித்து மகிழுங்கள்.
தூங்குவதற்கு முன்னாடி ஏன் குட்நைட் சொல்றோம்??
விடை: தூங்குனதுக்கு அப்பறம் சொல்லமுடியாதுல்ல அதனாலதான்
ஒரு ஆண் B ஒரு பெண் B டீ குடிக்குது அப்ப ஒரு ஈ விழுந்திருச்சு
அப்ப ஆண் B பெண் B கிட்ட என்ன சொல்லியிருக்கும்?
விடை: AB CD E .
( A (ஏ) B CD (பாருடி ) E (ஈ) )
tamil jokes
கிணற்றில் கல்லை போட்டால் ஏன் முழிகிறது?
விடை: ஏன்னா அதுக்கு நீச்சல் தெரியாது..
ஒரு ரூம்ல ஒரு கார்னர்ல ஒரு பூனை இருக்கு.
வலது மூலைல ஒரு எலி.
இடது மூலைல ஒரு கப் பால்.
பூனையின் கண்ணு எதில் இருக்கும் ?
பூனையின் கண்ணு அதோட முகத்தில்தான் இருக்கும்
tamil jokes
ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா, சந்திரனா?
மாணவன்: சந்திரன் தான் சார்.
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல.
ஆசிரியர்: ?!?!?!
..............................................
டீச்சர் : ஏன் லேட்?
சிறுவன் : வெளில ஒரு போர்டு போட்டிருந்தது அதான் லேட்
டீச்சர் : போர்டுக்கும் லேட்டா வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?
சிறுவன் : பள்ளிப்பகுதி மெதுவாகச் செல்லவும்னு போர்டு வச்சுருந்தாங்க.
tamil jokes
உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?
தெரியாது
Smiles
எப்படி?
முதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.
Coffee ஏன் உடம்புக்கு நல்லது இல்ல?
ஏன்னா அதுல 2 "e" இருக்கு
குரைக்கிற நாய் கடிக்காது
ஏன்?
ஒரே சமயத்தில் இரண்டு வேலையை செய்ய முடியாது..அதனால தான்.
மாடு ஏன் எல்லாருக்கும் பால் கொடுக்குது?
விடை: ஏன்னா மாடுனால டீ காப்பி கொடுக்க முடியாதுல அதனால்தான் பால கொடுக்குது.
உலகத்திலேயே பெரிய trouser எது?
விடை: அதுதான் bulltrouser
tamil jokes
டீச்சர்: "கண்ணகி மதுரையை எரித்தாள் " இது என்ன காலம்?
மாணவர்: "FIRE SERVICE" இல்லாத காலம் Sir !
டீச்சர்: ????
மனைவி: பணம் வந்தா கூடவே கஷ்டமும் வந்துடும்.
கணவன் : நான் வரதட்சணை வாங்கி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதைத் தானே சொல்றே?
நோயாளி – ஏன் டாக்டர், இதைக் கொடுத்தபோது சுகர் மாத்திரைன்னுதானே சொன்னீங்க
டாக்டர் – ஆமா.. சொன்னேன்.. அதுக்கென்ன இப்போ
நோயாளி – இல்ல டாக்டர்.. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு பார்த்தேன்.. இனிப்பாவே இல்லையே.. கசந்துச்சே.. அதான் வந்தேன்
டாக்டர்– !!!!
tamil jokes
மாணவன் சார், டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
டான்ஸ் மாஸ்டர் டான்ஸ் போடறாங்க
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?
நண்பர் 1: நடிகருக்கும் மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை ?
நண்பர் 2: தெரியலையேடா?
நண்பர் 1:இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துகிட்டு இருப்பாங்க.
தோழி 1 : என்னடி இது அநியாயமா இருக்கு, உன் வீட்டு வேலைக்காரி லீவு போடறா.. அன்னைக்கி உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா?
தோழி 2 : சும்மா இருடி. நான்தான் அவரை லீவு போட வைப்பேன்,ஏன்னா வேலைக்காரி விட்டுப் போன வேலையை யாரு செய்றது?
tamil jokes
ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்,சார்.
ஒரு சிறுவனை திருடர்கள் கடத்தினார்கள்
"உன் வீட்டில் இருக்கும் தங்கம், வைரம் எல்லாம் எங்கே இருக்கு" என்று கேட்டு மிரட்டினார்கள்.
"சாக்லேட், ஐஸ்க்ரீம் வாங்கி தந்தால் சொல்வேன் என்றான் சிறுவன்"
அவன் கேட்டதை வாங்கி கொடுத்து விட்டு
"இப்போ சொல்லு"
"எல்லாம் அடகு கடையில் இருக்கு"
ஒரு டிராபிக் போலீஸ், பைக் ஓட்டி வந்தவனை நிறுத்தி கேட்டார்.
"என்னப்பா தொப்பி போட்டுட்டு வண்டி ஓட்டிட்டு வர்ற, ஹெல்மெட் எங்க?……"
"ஹெல்மெட்ட விட தொப்பிதான் சார் சேப்டி, அதான் சார்"……
"இன்னா ஜோக்கா?….என்கிட்டயேவா?…….."
"சார்..நெசமாத்தான் சொல்றேன்…பத்தாவது மாடியில இருந்து ஹெல்மெட்ட போட்டு பார்த்தேன். துண்டு துண்டா ஒடஞ்சிச்சு. …..
அப்புறம் தொப்பிய போட்டு பார்த்தேன் உடையவே இல்லை……
அப்ப தொப்பிதானே சேப்டி…….."!!!??
tamil jokes
கடைக்காரர்: சார், இந்த பேண்ட் 10 வருஷமானாலும் சாயம் போகாது, கிழியாது.
வாடிக்கையாளர்: அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
கடைக்காரர்: 10 வருஷமா நம்ம கடைலதான இருக்கு.
"உங்க மனைவிய செல்லமா எப்படி கூப்பிடுவிங்க?"
"கூகிள் ன்னு"
"ஏன்?"
"நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா"
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா, நம்ம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
மகன் அப்பாவிடம்: அப்பா உனக்கு இருட்டில எழுத முடியுமா?
அப்பா : ஓ முடியுமே.
மகன் : அப்படின்னனா என்னோட ரேங்க் கார்டுல இப்ப கையெழுத்துப் போடுங்க.
அப்பா: உலகத்துலயே காசுதாண்டா முக்கியம் காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.
மகன்: ஏன் கடன் வாங்கலாமே!
tamil jokes
சார் புதுசா போட்ட ஸ்வீட் பாக்கெட் ஒண்ணு குடுங்க
கடைக்காரர் ஒரு பாக்கெட்டை கொடுக்கிறார்
இந்த பாக்கெட் எப்போ போட்டது?
பாக்கெட் இப்ப போட்டதுதான் சார்…
ஒரே நாத்தம் அடிக்குதே
ஸ்வீட்தான்சார் போன தீபாவளிக்கு போட்டது.
"103க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு?"
"104"
அதான் இல்ல, நடுவுல "0" தான் இருக்கு.
ஆசிரியர்: ஒரு தட்டுல பத்து லட்டு இருக்கு
அதுல 5 லட்டுவை உன் தம்பிய எடுத்துக்கச் சொல்ற
அப்ப தட்டுல மீதி எத்தன லட்டு இருக்கும்?
மாணவன்: ஒண்ணுமே இருக்காது..
ஆசிரியர்: மக்கு, உனக்கு கணக்கே தெரியல
மாணவன்: உங்களுக்கு தான் என் தம்பிய பத்தி தெரியல…
tamil jokes
காதலன் : உங்க அப்பாக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒன்னுதான்?
காதலி : எதனால அப்படி சொல்றீங்க?
காதலன் : ரெண்டு பேருமே திருப்பிக் கொடுக்கறது இல்லயே.
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.
எதுக்குங்க பையனை அடிக்குறீங்க. எதோ பாவம்னு பாஸ் பண்ணி விட்டிருக்கானுங்க.
இந்த நாய் குடிச்சுட்டு வந்து ஏன் கிட்டையே. I AM DEGREE HOLDER னு கை கொடுக்குறான்டி.
நாம எவ்வளவு தான் விரட்டி விரட்டி அடித்தாலும். மறுபடியும் பாசமா நம்ம கிட்டயே திரும்பி வர ஒரே ஜீவன்
கொசு மட்டுமே...!
மனைவி : என்னங்க நான் மாசமா இருக்கேன்...
கணவன் : உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னியா?
மனைவி : போங்க நான் காலேஜ் படிக்கும்போது சொன்னதுக்கே அடிச்சாங்க. இப்ப எப்படி சொல்றதாம்...!
கணவர் :???
tamil jokes
மனைவிக்கு கணவன் தான் முதல் குழந்தையாம். அதுக்காக பொழுதன்னைக்குமா மளிகை கடைக்கு போயிட்டு வரச் சொல்லுவீங்க...!?
டாக்டர் இடது கால் ரொம்ப வலிக்குது. வயசு ஆயிடுச்சு அதான். வலது காலுக்கும் அதே வயசுதானே ஆச்சு.
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!
நோயாளியின் உறவினர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
நோயாளி : டாக்டர், எனக்கு இனிமே இதயத்தில எந்தப் பிரச்சினையும் இல்லையே?
டாக்டர் : கவலையேபடாதீங்க, இனிமே நீங்க உயிரோட இருக்கிற வரைக்கும் உங்க இதயம் நல்லா வேலை செய்யும்.
மனைவி : ஏங்க, உங்க அம்மா இந்த திட்டு திட்டறாங்களே கொஞ்ச கூட கேட்க மாட்டீங்களா?
கணவன் : கேட்டுக்கிட்டுத்தானே இருக்கேன்?
மனைவி : ????
tamil jokes
கணவன் : என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது?
மனைவி : நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!
கணவன் : நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பியிருப்பாரோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.
மனைவி : ஏங்க வீணா அவர்மேல பழியைப் போடுறீங்க?
கணவன் : பின்ன என்ன, வரதட்சணையா வாங்கின ஐம்பதாயிரத்தை எடுன்னு திருடன் கரெக்டா கேட்டானே.
கணவன் : சென்ஸார் அதிகாரிங்க வந்திருக்காங்க.
மனைவி : எதுக்காம்?
கணவன் : நீயும் என் அம்மாவும் போடற சண்டையில் அளவுக்கு மீறி வன்முறை இருக்குனு அவங்களுக்குத் தகவல் போயிருக்குதாம்.
tamil jokes
ஒரு வழுக்கைத் தலை ஆள்:கொஞ்சம் ஏமாந்ததால எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க?
அப்புறம் என்ன ஆச்சு?
வழுக்கி விழுந்துட்டாங்க!
பையன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?
அம்மா : விமலா டா…
பையன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்.
அம்மா :???
தூங்கும்போது அலாரம் அடிக்கிற சத்தத்தைக் கேட்டாலே எனக்கு அலர்ஜி…
அதனால…?
அலாரம் செட் பண்ணிட்டு, அது அடிக்கறதுக்கு முந்தியே "டாண்"னு எழுந்து, அதைப் பண்ணிடுவேன்!
சுரேஷ் : பசங்களெல்லாம் பயப்படற மாதிரி சினிமாப்படப் பெயர் சொல்லுடா பார்க்கலாம்.
ரமேஷ் : "காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்.
tamil jokes
நம்ம தலைவருக்கு ஆஸ்பத்திரியில உடனடியா ரத்தம் கொடுக்கணும்னு சொல்றாங்க..ஆனா அவர் குரூப் ரத்தம் கிடைக்கலை.
அவர் ரத்தம் என்ன குரூப்?
ஊழல் குரூப்பாம்.
நோயாளி : டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல.
டாக்டர் : வயிறு வலிக்கும் போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.
மனைவி : சாப்பாடு போட வா?
கணவன் : அடியே இன்னைக்கு நான் ஓட்டல்ல சாப்பிட்டுட்டேன்
மனைவி : அது சரி எவ்வளவு மாவாட்டிட்டு வந்தீங்க?
நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பன்ரீங்க?
நோயாளி 2: டாக்டர் தான் "அரை(றை) மூடி " டானிக் குடிக்க சொன்னார்.
டைரக்டர் : என்னய்யா இது… படத்தோட கதையை சிலேட்டுல எழுதிட்டு வந்திருக்கே.
ஒருவர் : அடுத்த படத்துக்காவது வித்தியாசமா கதை எழுதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க அதான்?
டைரக்டர் : ???
tamil jokes
ஆசிரியர் : மாணவர்களே, எறும்பு பெரிசா? யானை பெரிசா?
மாணவன் : அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம், பிறந்த தேதி வேணும்.
ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ல கட்டுவாங்க?
மாணவன்: ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?
ஆசிரியர்: ???