Tamil Invitation Quotes-கல்யாணத்துக்கு அழைப்போமா..?

திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒரு புதிய பந்தத்தை ஏற்படுத்தும் உறவாகும். அது அன்பினை அடிப்படையாகக்கொண்டது. அன்பு என்பது காதலின் மறுவடிவம்.;

Update: 2024-02-24 15:17 GMT

tamil invitation quotes-திருமண அழைப்பிதழ் மாதிரி (கோப்பு படம்)

Tamil Invitation Quotes

திருமணத்துக்கு முன்னரே காதல் செய்யலாம். பின்னர் திருமணம் செய்யலாம். அல்லது பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கலாம். அதில் ஆண் மற்றும் பெண்ணுக்கும் பிடித்திருக்கவேண்டும். அந்த விருப்பமே காதலாக மலரும். திருமணத்துக்குப்பின்னர் காதல் வாழ்க்கை தொடரும். அந்த காதல் வாழ்க்கைத் தொடர பெரியோர்கள் சேர்ந்து ஒரு திருமண அங்கீகாரம் வழங்க பத்திரிக்கை எழுதுகிறோம்.

அது ஊராருக்கு சொல்வதற்கு. என் மகன் அல்லது என் மகளுக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பதை கூறும் விழா.

Tamil Invitation Quotes

மாதிரி அழைப்பிதழ்

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது"

இனியதோர் மணவிழா

அன்புடையீர்..!

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,

முத்துடைத்தமாம் நிரை தாழ்ந்த பந்தர்கீழ்

பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் ஆசியுடன்

எங்கள் திருமணம் இனிதே நடைபெறவிருக்கிறது

வாழ்வின் உன்னத கணங்களில்

உடனிருந்து வாழ்த்தும்படி

உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்..!

–பிரியங்களுடன் மணமக்கள்

தலைவன்: XXX

தலைவி: XXX

பொன்னான நேரம்: XXX

பொற்காலம்: XXX

நிகழிடம்: XXX

இருகரம் கோர்த்து இன்புற்று வாழ வாழ்த்துகிறோம்

தங்கள் நல்வரவை இனிதே விரும்பும்:

அடையாளம் காட்டிய அப்பா அம்மா..!

நல்வழி காட்டிய தாத்தா பாட்டிகள்..!

அன்பு காட்டிய பெரியப்பா பெரியமாக்கள் ..!

சிந்திக்க வைத்த சித்தப்பாக்கள் சித்திகள்..!

மதிப்புக்குரிய மாமாக்கள் அத்தைகள்..!

மனம் நிறைந்த அத்தான்கள் அக்காமார்கள்..!

அக்கறை கொண்ட சகோதர சகோதரிகள்..!

பண்பு படைத்த சம்மந்திகள்..!

மற்றும்

நெஞ்சம் நிறைந்த நண்பர்கள்..!

...............................................................

Tamil Invitation Quotes

விழா

இருகரம் சேரும் விழா

இருமணம் சேரும் விழா

திலகமிடும் திருவிழா

வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா

மன்றல் விழா

என்று தலைப்பே இப்போதெல்லாம் தமிழ் நயத்துடன் வைக்கின்றனர்.

மாதிரிக்காக..

இருமணம் இணையும் திருமணம்

விழிகளில் மலர்ந்தது

காதல் மலர்

ஐப்பசி - அறிவன் புதன்

விடியலில் துவங்கும்

என் வாழ்க்கைப் பயணம்

வேதங்கள் ஓத மத்தளங்கள் முழங்க

சுற்றம் புடைசூழ

நம்பி (மணமகன் பெயர்)நான்

நங்கை (மணப் பெண் பெயர்)யின் கரம் பற்ற

நண்பர்காள் வாரீர்

உம் உள்ளம் குளிர வாழத்துவீர்

எம் மனம் மகிழ

நாள்

இடம்

நேரம்

வழி

அன்புடன் அழைக்கும்

மணமக்கள்

...........................................................

Tamil Invitation Quotes

அழைப்பிதழ் குறிப்புகள்

திருமண அழைப்பிதழ்கள் மங்களகரமான நிகழ்வைக் குறிப்பதால், பெரும்பாலும் மஞ்சள் நிறத்திலேயே அமைந்திருக்கும்.

திருமண மண்டப விபரம், மணமகன் மற்றும் மணமகளுடைய குடும்பத் தகவல்கள், படிப்பு விபரம், திருமண திகதி, நேரம் உள்ளிட்டவை கண்டிப்பாக அழைப்பிதழில் இருக்கும்.

திருமண மண்டபத்தை அடைவதற்கான வழிகள், அவ்வூருக்கு செல்லும் பேருந்து விபரம் உள்ளிட்டவைகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கும்.

பெண் அழைப்பு, நிச்சயதார்த்தம், போன்ற தகவல்களும் சில சமயங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒவ்வொருவரும், தங்களுடைய வசதிக்கு ஏற்றவாறு திருமண அழைப்பிதழை வடிவமைத்திருப்பர். குறைந்தது 10 அழைப்பிதழாவது ஒவ்வொரு திருமணத்திற்கும் கொடுக்கப்படும்.

........................................................

Tamil Invitation Quotes

முன்பகுதி 

திருமண அழைப்பிதழ்

(with a decorative symbol like a Ganesha or auspicious floral motif)

உள்ளே 

Top/ Invocation:

ஸ்ரீ கணேசாய நம:

Invitation Text:

[Groom's Parents' Names]

மற்றும்

[Bride's Parents' Names]

அன்புடன் அழைக்கின்றனர்

தங்கள் அருமை [Son/Daughter's Name]

திருமணத்திற்கு

செல்வி/செல்வன் [Bride/Groom's Name]

உடன்

நாள்: [Date]

நேரம்: [Time]

இடம்: [Venue]

வது மண விழா

[Location for the reception, if different]

RSVP & Contact

தங்கள் வருகை எமது விழா

நவீன மாதிரி 

முன்பகுதி 

[Bride's Name]

[Groom's Name]

உள்ளே 

இதயங்கள் இணையும் நாள்!

[Groom's Parents' Names]

மற்றும்

[Bride's Parents' Names]

மகிழ்ச்சியுடன் உங்களை அழைக்கின்றோம்

எங்கள் அன்பு [Son/ Daughter's Name]

திருமணத்திற்கு செல்வன்/செல்வி

[Bride/Groom's Name] உடன்

நாள்: [Date]

நேரம்: [Time]

இடம்: [Venue]

உங்கள் அன்பான வருகையை

எதிர்நோக்குகிறோம் 

Tags:    

Similar News