மூளை வளரணுமா..? அப்ப கணவாய் மீன் சாப்பிடுங்க..!
Squid Fish Benefits in Tamil-கணவாய் மீன் பல ஆரோக்ய நன்மைகளை உள்ளடக்கி இருக்கிறது. இதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.;
Squid Fish Benefits in Tamil
கணவாய் மீன்கள் முதுகெலும்பு இல்லாத ஒருவகை மீனாகும். பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர் போன்ற கனிமங்களும் ஒமேகா-3 கொழுப்பும் உள்ளன.
கணவாய் மீனை விரும்பிச் சாப்பிடும் மக்கள் அதிகம். ஆனால், வறுத்த கணவாய் மீனில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் வறுத்து சாப்பிடுவது ஆரோக்யமானதாக பார்க்கப்படுகிறது.
சிப்பிகள், அக்டோபஸ், போன்ற ஒரே குடும்பத்தின் ஒரு வகையே கணவாய் மீன். இது பெரும்பாலும் வருத்தே சமைக்கப்படுகிறது. மேலும் கணவாய் மீன்கள் வறுக்கப்படுவதால் அதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் காரணமாக கொழுப்பு மிக அதிகமாக இருக்கும். அதில் நிறைவுற்ற அளவில் டிரான்ஸ் கொழுப்பு அதிகமாக உள்ளது.
இதில் நிறைந்திருக்கும் அதிகமான கொழுப்பு காரணமாக இது மிகவும் ஆரோக்யமானதாக அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.
கணவாய் மீன் ஆரோக்கியமானதா ?
விலங்கு உயிரினங்கள் மட்டுமே கொலஸ்ட்ராலின் உணவு ஆதாரங்கள். கணவாய் மீனில் மற்ற சில விலங்குகளை போல் இல்லாமல் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது.
செறிவூட்டப்பட்ட கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு ஆகியவை பொதுவாக அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
கணவாய் மீனை வறுக்கும் போது, அதன் மொத்த கொழுப்பு மற்றும் அதன் நிறைவுற்ற கொழுப்பு உள்ளடக்கம் அதிகரிக்கும்.
100 கிராம் சமைக்கப்படாத கணவாய் மீனில் 198 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் மற்றும் 13.2 கிராம் புரதம் மற்றும் 0.3 கிராம் நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை நிறைந்துள்ளன.
இது ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டுள்ளது.0.09 கிராம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் 0.4 பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்துள்ளது.
உங்களுடைய உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நீங்கள் முடிவு எடுத்தால், குறைந்த அடர்த்தி கொழுப்பு எனப்படும் கெட்ட (LDL) கொழுப்பின் அளவை குறைப்பதை உங்கள் இலக்காக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு நிறைவுற்ற கொழுப்பிலிருந்து உங்கள் மொத்த கலோரிகள் 6 சதவீதத்துக்கு மேல் சாப்பிடக் கூடாது.
மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் உட்பட அதிக நிறைவுறாத கொழுப்புகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த கொழுப்புகள் உங்கள் உயர் அடர்த்தி கொழுப்பின் அளவை (HDL) அதிகரிக்க உதவும். அது மட்டுமல்லாமல் கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) வெளியேற்ற உதவுகிறது.
கணவாய் மீனின் நன்மைகள்
ரத்த சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களை அதிகரிப்பதில் கணவாய் மீன்கள் பயன்படுகின்றன. இதில் உள்ள காப்பர் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துவதுடன் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே மூளை வளர்ச்சி அதிகமாகிறது.
இதில் இருக்கும் நல்ல கொழுப்புகள் இருதய தமனிகளில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்க உதவும். மேலும் உடல் எடை கூடுவது என்பதை குறைக்கும்.
நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும். உடலில் இன்சுலின் குறைபாட்டை சமநிலையில் வைத்திருக்கும்.
கடல் உணவுகளில் இருக்கும் ஒமேகா-3 ஊட்டச்சத்து உடலை ஆரோக்யமாக வைத்திருக்க எப்பொழுதும் தேவைப்படுகிறது.
இந்த மீனில் நல்ல கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பதால் தினந்தோறும் கூட இதை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2