பட்டுப்போன்ற மென்மையான சருமத்துக்கு..இதை செய்ங்க..!
skin whitening tips in tamil-பெண்களுக்கு தோல் மென்மையாக இருந்தால்தான் அழகு. அப்படி மென்மையான சருமத்துக்கு இயற்கையான வழிமுறைகள் இருக்கு. வாங்க பார்ப்போம்.;
skin whitening tips in tamil-சருமம் மென்மையாக,பளபளப்பாக இருப்பதற்கு மனமும் ஒரு காரணம். எவ்வளவு நல்ல உணவுகளை உட்கொண்டாலும் கூட மனம் அமைதியாக இல்லை என்றால் எந்த நன்மையையும் நடந்துவிடப்போவதில்லை. ஆக, அழகு என்பது மனம் சார்ந்த விஷயம் இல்லையா..?
இயற்கை, நமது சருமத்துக்கு தானாகவே புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. அதை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்கும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பதின்ம வயதில் தோல் பொலிவு பெறும். அதே வயதாகும்போது தோலில் மாற்றங்கள் நிகழும். புள்ளிகள் வரும். சுருக்கங்கள் விழும். அதை யாரும் தடுத்துவிடமுடியாது. இருப்பினும், இளமையை கொண்டாட நமக்கும் கொஞ்சம் அவகாசம் வேண்டுமல்லவா..? அதற்காக சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
வயதாகும்போது தோல் சுருங்குகின்றது. அதேபோல மன அழுத்தம், கவனிப்புக் குறைவு ஆகியவற்றாலும் சுருக்கங்கள், கரு வட்டங்கள், வறண்ட சருமமாகுதல், துளைகள், பருக்கள், தோல் மங்கலாகுதல் ஆகியவை வேண்டாத விருந்தினராக வந்து சேருகின்றன. ஆயினும், பல இயற்கையான எளிய குறிப்புகள் தோலை பளபளப்பாக்கி, புத்துயிர் அளிக்கின்றன.
அதை பார்ப்போம் வாங்க.
ஆயுர்வேதம்
பழமையான ஆயுர்வேதத்தில், அழகின் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த முறையில் மெதுவாக சருமத்தினைச் சுத்தப்படுத்தி, அதன் தோல் சுவாசிப்பதற்கு வழிவகை செய்கிறது. இதற்குத் தேவையான பொருட்கள் சமையல் அறையிலேயே கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
1.கடலை மாவு - 2 டீஸ்பூன்
2. சந்தனத் தூள்- தேவையான அளவு
3. மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
4. கர்ப்பூரம் ஒரு சிட்டிகை
5. தண்ணீர் அல்லது பால் அல்லது பன்னீர்(ஏதாவது ஒன்று)
செய்முறை
கடலை மாவு, சந்தனத் தூள், கர்ப்பூரம், மஞ்சள் தூள் ஆகியவற்றை தண்ணீர் அல்லது பால் அல்லது பன்னீரில் கலந்து ஒரு பசை போன்று ஆக்கவேண்டும். அதை முகத்தில் மசாஜ் செய்வது போல நன்றாக பூசிக் கொள்ளவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து, முகத்தைக் கழுவி விடவேண்டும். முகம் பளபளப்பாக இருக்கும்.
skin whitening tips in tamil
அடுத்த டிப்ஸ்
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 1
சர்க்கரை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை அதிகரிக்கும்.
சர்க்கரை
சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய மற்றும் ஆரோக்கியமான சரும செல்கள் வளர்ச்சி பெற உதவும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் உள்ள நொதிகள், சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பிக்க உதவுகிறது.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா சருமத்தின் pH அளவைப் பராமரிக்க உதவும். மேலும் இது ப்ளீச்சிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும்.
செய்முறை:
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவேண்டும். அத்துடன் சர்க்கரை பவுடர், கற்றாழை ஜெல், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஒரு கெட்டியான பசை (பூசும் அளவில்))போல வரும்வரை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
பின்பு பிரஷ் பயன்படுத்தி முகத்தில் நன்றாக தடவி 30-40 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின் குளிர்ந்த நீரில் மென்மையாக உருட்டித் தேய்த்து கழுவ வேண்டும்.
இதைப் பயன்படுத்திய பின், உடனே வெயிலில் செல்லவேண்டாம். ஒருவேளை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சன் ஸ்க்ரீன் எதையேனும் முகத்தில் பூசியபின் செல்லலாம்.
skin whitening tips in tamil
மனதில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் :
- இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-4 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் 10 நாட்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- முக்கியமாக சரும நிறம் இன்னும் அதிகரிக்க வேண்டுமென்று அடிக்கடி இதைப் போட வேண்டாம். இதில் பேக்கிங் சோடா இருப்பதால், தொடர்ச்சியாக பயன்படுத்தினால் சருமம் மோசமாக பாதிக்கப்படும்.