தடைகளை தாண்டுவதைவிட தவிர்ப்பதே மேல்..! வெற்றி உங்கள் வசம்..!

Self Confidence Mahabharata Quotes in Tamil-நம்பிக்கை என்பது வெறும் வார்த்தைதான். ஆனால் அது உங்களுக்குள் உள்ளது. வெளியே தேடாதீர்கள்.;

Update: 2022-08-31 09:35 GMT

Self Confidence Mahabharata Quotes in Tamil

சோர்வடையும் போதெல்லாம் நமக்கு நேர்மறையான எண்ணங்கள் இருந்தால் மட்டுமே சோதனைகளை சாதனைகளாக்க முடியும். வெற்றி உங்கள் விரல்நுனியில். முயற்சியும் முனைப்பும் இரண்டு கண்கள். சிந்தனைகளை கூர் தீட்டுங்கள். இது உங்களுக்குமட்டுமல்ல. உங்கள் நண்பர்களுக்கும். சோகத்தில் துவண்டிருக்கும் நண்பர்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள். இந்த நம்பிக்கை மேற்கோள்களை அதற்கு உதவும்.

  • முயற்சி செய்யத் தயங்காதே

முயலும் போது முட்களும்

உன்னை முத்தமிடும்.

எல்லோரும் பயணிக்கிறார்கள்

என்று நீயும் பின் தொடராதே..

உனக்கான பாதையை

நீயே தேர்ந்தெடு..!

  • நம்பிக்கை வெற்றியோடு வரும்

ஆனால் வெற்றி

நம்பிக்கை உள்ளவரிடத்தில்

மட்டுமே வரும்..!

  • வெற்றி இறுதியுமில்லை

தோல்வி முடிவுமில்லை

தொடர்வதன் துணிவே பெரிது..!

  • விழுதல் என்பது வேதனை

விழுந்த இடத்தில மீண்டும்

எழுதல் என்பது சாதனை..!

  • வியர்வையும் கண்ணீரும்

உப்பாக இருக்கலாம்..!

ஆனால்

அவைகள் தான் உங்கள்

வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்,

கருவி..!

  • கரையும் மெழுகில் இருளை கடக்க முடியும்

என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்..!

  • நம்பிக்கையுடன் ஓடி கொண்டே இரு

நதி போல..

வெற்றி காத்திருக்கும் உனக்காக

ஒரு இடத்தில கடல் போல..!

  • மலையை பார்த்து மலைத்து விடாதே

மலை மீது ஏறி நின்றால் அதுவும் உன் கால் அடியில்..!

  • நான் மெதுவாக நடப்பவன் தான்

ஒரு போதும் பின் வாங்குவதில்லை.

  • எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட

ஒருமுறை ஆபத்தை சந்திப்பதே மேல்...!

  • முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்

முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்தால்

முழுமையான வெற்றி நிச்சயம்...!

  • விதைகள் கீழ் நோக்கி எறிந்தால் தான்

மேல் நோக்கி விருட்சமாக வளரும்

அதுபோல

விழும் போது விதையாக விழு

எழும் போது விருட்சமாக எழு..!

  • நம் மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை

வாழ்க்கை நம்வசம்..!

  • பறவைகள்

தன் சிறகுகளையே நம்புகின்றன

அமர்ந்திருக்கும் கிளையை அல்ல,

நீ உன்னை மட்டும் நம்பு

வெற்றி நிச்சயம்..!

  • கடலில் இருக்கும் அத்தனை

நீரும் ஒன்று சேர்ந்தால் கூட

ஒரு கப்பலை கவிழ்க்க முடியாது,

கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே

அது சாத்தியம்,

வாழ்க்கையின் எந்த பிரச்சனையும்

உங்களை பாதிக்கவே முடியாது

நீங்கள் அனுமதித்தால் தவிர..!

  • நம் நிலை கண்டு

கை கொட்டிச் சிரித்தவர்களை

கை தட்டிப் பாராட்ட வைப்பதே

வெற்றிக்கான வாழ்க்கை அடையாளம்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News