உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்..!
Confidence in Tamil-தேவை இல்லாத ஒன்றை நம் தோளில் சுமந்து திரிவதால், தேவையற்ற கவலைகள் சூழ்கின்றன. நமது மகிழ்ச்சி நமது உள்ளத்தில்.;
Confidence in Tamil-மனித வாழ்க்கை மகிழ்ச்சி, கோபம், சிரிப்பு, அழுகை என உணர்வுகளின் கலவையான தொகுப்பு. அந்த தொகுப்புக்குள் நம்பிக்கை, அவநம்பிக்கை, மான, அவமானங்கள், சுயமரியாதை என சில உள்ளடக்கங்களும் காற்றில் கரையும் கற்பூரம்போல வியாபித்துக்கிடக்கின்றன. கற்பூரம் பற்ற வைத்தால் சட்டென பற்றிக்கொள்ளும். அதேபோலவே மனமும் மகிழ்ச்சி என்றால் கொண்டாடும் அதே மனசு சோகத்தில் துவண்டுபோவதும் நடக்கிறது.
மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்ளும் மனசு, சோகத்தை ஏற்க மறுப்பது ஒருவகையில் அறியாமை என்றே சொல்லவேண்டும். பிறப்பு நிச்சயம் என்றால் இறப்பும் நிச்சயம் என்கிற தெளிவு பெறும் மனசு உலகை உணர்ந்த மனதாகும். அவர்களே ஞானியாகிறார்கள். கோபம், மகிழ்ச்சி, சிரிப்பு, அழுகை என எதையும் ஏற்கும் மனவலிமை அவர்களுக்கு உண்டாகும். இதோ உங்களுக்கு நம்பிக்கை தரும் மேற்கோள்கள்.
ஒரு நொடி சிந்தனையால் வாழ்க்கையை முடித்துவிடலாம். ஆனால் ஒவ்வொரு நொடி சிந்தனையில் அதே வாழ்க்கையை வென்று விடலாம். எது வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நேரம் உங்களுக்கு..!
முடிவெடுத்தால் முடியாதது ஒன்றுமில்லை..! துணிந்துவிட்டால் வெற்றி ஒன்றும் வெகு தூரத்தில் இல்லை.
விழுவது தவறல்ல, எழாமல் வீழ்ந்து அப்படியே கிடப்பதுதான் தவறு.
யாரிடம் கற்பது விடாமுயற்சியை? கடலிடம் கற்றுக்கொள்!..! கடமை தவறாமையை கதிரவனிடம் கற்றுக்கொள்..! உத்வேகத்தை காட்டாறு பார்த்துக் கற்றுக்கொள்..! சுறுசுறுப்பை தேனீக்களிடம் இருந்து கற்றுக்கொள்..! உழைப்பை எறும்புகளிடம் இருந்து கற்றுக்கொள்..! இயற்கை நமக்களித்த பாடப்புத்தகங்கள் இவைகள்..! அதிலிருந்து பாடம் கற்று உன் வாழ்க்கையை வாழத்தொடங்கு..!
போராடும் வரை வீண்முயற்சி என்று சொன்னவர்கள் வென்ற பின் விடாமுயற்சி என்பார்கள்.
ஆயிரம் உறவுகள் நம் வாழ்க்கையில் இருந்தாலும் அவரவர் வாழ்க்கையை அவர்கள் தான் எதிர் கொள்ள வேண்டும். அவரவர் மனம். அவரவர் பாதை. அவரவர் பயணம். அவரவர் வாழ்க்கை. இதை உணர்ந்தால் வாழ்க்கை உன்வசம்..!
இன்றைய வலி நாளைய லட்சிய வெற்றிக்கான அறிகுறி. அந்த வலி வெற்றியின் வரலாற்றுத் தடங்கள்..!
பேச்சில் நம்பிக்கை இருக்கவேண்டும்..! விடும் மூச்சுக்காற்றில் கூட நாணயமம் இருக்கவேண்டும்..! எனில், வெற்றி நிச்சயம்..!
சமுத்திரத்துக்கு முன்னாள் நின்று பெருமை கொள்..! இவ்வளவு பெரிய உனது முன்னாலேயே துணிந்து நிற்கும் எனக்கு எல்லாமே வெறும் தூசுதான் என்று நம்பிக்கை கொள்..!
வலியில் வீழ்ந்து,கவலைகளை சந்தித்து அவமானங்களை தூக்கி எறிந்து, துரோகங்களை எதிர்கொண்டு வாழ்ந்த நாட்களில் கூட துளிர்த்தெழும் ஒரே ஒரு புன்னகைதான் உயிர்களின் ஆகச்சிறந்த நம்பிக்கையின் விழுது..!
எதிர்காலம் உள்ளங்கை ரேகையில் இல்லை, அந்த ரேகைகள் அழிந்துபோகும் அளவிலான நமது உழைப்பில் உள்ளது..!
நேரம் சரியில்லை என்பது இது திறமை இல்லாதவன் பேசும் வெற்றுப்பேச்சு..! நேரம் போதவில்லை என்பதே வெற்றியாளனின் உயிர் மூச்சு..!
வாழ்க்கை என்பது சொர்க்கமாக மாறுவதும் நரகம் ஆவதும் அவரவர் கையில்தான் இருக்கிறது. உழைப்பவனுக்கு வாழ்க்கை சொர்க்கமாகிறது..!
மெதுவாகச் சென்றாலும் தடையின்றி முன்னேறிச் செல்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான்.
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு, இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.
ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள். நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்.
நம்மை மதிக்காதவர்களை எண்ணி நாம் மனம் வருந்துவது நம் வீழ்ச்சியின் முதல் படி. முதலில் நாம் நம் மதிப்பை உணர்ந்தால் தான் தன்னம்பிக்கை தாவிவந்து நம்மை அணைக்கும்..!
self confidence quotes in tamil
தன்னம்பிக்கை இருக்கும் வரை தலைக்கனம் நம்மை நெருங்காது..! தலைக்கனம் இருக்கும் வரை தன்னம்பிக்கை நம்மிடம் நிலைக்காது..!
உன்னை நீ இழக்கும் நேரத்தில் உன்னை கெட்டியாக எட்டிப் பிடிக்கும் 'கை' நம்பிக்கை..! அது தான் உந்தன் தன்னம்பிக்கை..!
'எல்லாமே என் நேரம்' 'எல்லாமே என் நேரம்பா' சொல்லும் விதத்தில் தான் உள்ளது. எல்லாம் எனக்கான நேரம். நான் உழைக்கவும் முயற்சிக்கவும் தயாராக இருக்கிறேன் என்பது ஒரு ரகம். அட போப்பா எல்லாமே என் நேரம்..எதை தொட்டாலும் நடக்கவில்லை என்பது நம்பிக்கை இழப்பின் வெளிப்பாடு. இது மற்றொரு ரகம். எது வேண்டும் என்பது உங்கள் கைகளில்..!
இழந்தது எதுவாயினும் அதைவிட சிறந்தது கிடைக்கும் என்பது நம்பிக்கை..! கிடைத்தது எதுவாயினும் அதுவே சிறந்தது என நினைப்பது தன்னம்பிக்கை.
முடியும் என்ற ஒற்றை வார்த்தையில் தான் உயிரினங்கள் வாழ்கின்றன..! சிங்கமும் புலியும் கொள்ளும் என்று அஞ்சினால் மான்கள் உயிர்வாழ முடியாது..!
யார் சொன்னது..உனக்கு உதவ யாரும் இல்லை என்று..! நீ மட்டும் முயற்சி செய்ய பயிற்சி எடுத்தால் காலம் முழுவதும் உனக்குள் குடியிருப்பேன் என்றென்றும் உனக்கு உதவுவதற்கு - இப்படிக்கு உன் தன்னம்பிக்கை.
வெற்றி என்னும் மைல்கல்லை அடைய உன்னை தூக்கிப்பிடிக்கும் ஆகச்சிறந்த ஆயுதமே நம்பிக்கை..! அதை மட்டுமே வளர்த்துக் கொள்ள உன்னை முழுவதுமாக தயார் படுத்திக்கொள். வெற்றி இலகுவாகும்..!
வாழ்க்கையில் பிறந்தோம், இறந்தோம் என்பது விலங்குகளுக்குமான வாழ்க்கை..! பிறந்தோம்.. சாதித்தோம்..மடிந்தோம் என்றால் வரலாறு பேசும்..!
எத்தனை சோதனைகள் வந்தாலும் அந்த சோதனைகளை சாதனைகளாக்கும் வலிமை இருந்துவிட்டால் வேதனைகள் ஒருபோதும் உன்னை நாடாது அஞ்சி ஓடும்..!
நீ அறியாமல் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் நீ பொறுப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீ செய்வது தவறு என்று தெரிந்தும் அதை மீண்டும் மீண்டும் செய்தாயானால் அந்த நிமிடம் முதல் நீ செய்யும் அனைத்து தவறுகளுக்கும் நீயே பொறுப்பு.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2