மீண்டும் பள்ளிக்கூடம் .போவோமா..? பழைய நட்புகளை பார்ப்போமா..?
School Life Friends Quotes-இளமையைத் தொலைத்த பின்னர்தான் இளமைக்காலத்து நினைவுகள் அதிகமாக வாட்டுகின்றன.
School Life Friends Quotes
நட்பு என்பது உறவுகளைத்தாண்டி ஏற்படும் மின் இணைப்பு. அதை மற்றவர்கள் சீண்டினால் ஷாக் அடிக்கும். இல்லாத உறவு போல வந்த இறுக்கமான உறவு, நட்பு. அதுவும் பால்யகாலத்து நட்பு மறக்கமுடியாத இனிமையான நினைவுளாக பதிந்து கிடைக்கும். ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டது, பின்னர் உடனே சமாதானம் ஆகிக்கொள்வது, காக்கா கடி கடித்து கடலைமிட்டாய் சாப்பிட்டது, கிணற்றில் சுரைக்குடுக்கை கட்டி நீச்சலடித்து பழகியது. குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஒட்டி விழுந்து அடிபட்டது என அந்த பால்ய காலத்து பள்ளி நட்புக்கு ஈடு இணை எதுவும் ஆகாது.
அப்படி சேர்ந்து வாழ்ந்த நட்புகளின் நாட்கள் இன்னும் பசுமையான நினைவுகளாக. நட்பு மேற்கோள்கள் உங்களுக்காக இதோ தரப்பட்டுள்ளன.
தோள் கொடுக்கத் தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்.
உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும்.நட்பு இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்.
சோகமான நேரம் கூட மாறிப்போகும்.வலிகள் கூட தொலைந்து போகும்.நண்பர்கள் உடன் இருந்தால்.
நல்ல நண்பனிடம் எவ்வளவு கோபமும் காட்டலாம்.ஆனால், ஒரு நிமிடம் கூட சந்தேகப்படக் கூடாது.
ஒரு ரோஜா என் தோட்டமாக இருக்கலாம்... ஒரே நண்பன், என் உலகமாக இருக்கும்போது.
நான் அதிகமாக கேட்க விரும்புகிறேன். கவனமாகக் கேட்பதிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். பெரும்பாலான மக்கள் ஒருபோதும் கேட்பதில்லை.
தொலைதூரம் சென்று மறைந்தாலும் மனதை விட்டது என்றும் மறைவதில்லை. பள்ளி நாட்களில் நாம் அரட்டை அடித்ததை.
பழகும் முன் தனிமை. பழகிய பின் இனிமை. பிரிவு என்பதோ கொடுமை. பிரிந்தபின் தான் தெரியும் நட்பின் அருமை.
சுகமான நேரம் கூட மாறிப்போகும்.. வலிகள் கூட தொலைந்து போகும்… நண்பர்கள் உடன் இருந்தால்..
நீ தடுமாறி கீழே விழும் போது தாங்கிப் பிடிப்பவனும் தடம் மாறும் போது தட்டிக்கேட்பவனும் தான் உண்மையான நட்பு..
எந்த உறவை மறந்தாலும் நல்ல நட்பை யாரும் வாழ்நாளில் மறப்பதில்லை.
நட்பு என்றால் உன் மனதில் வைக்க வேண்டிய அழிக்கமுடியாத வைர வரிகள். பழகும் போது உண்மையாய் இருக்க வேண்டும். பழகிய பின்பு உயிராய் இருக்க வேண்டும்.
ஒரு துளி கண்ணீரைத் துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பது தான் நட்பு
சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல.. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு.
ஆயிரம் சொந்தம் நம்மைத் தேடி வரும்.... ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்.
பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல... சில நேரங்களில் தட்டிகொடுப்பது தான் நட்பு.
நண்பர்களின் அன்பை விவரிக்க உணர்வுகள் போதும், வார்த்தைகள் தேவையற்றது.
நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கு வெளிச்சம் போட்டுகாட்டும் சிறந்த கருவிதான் நட்பு.
கடவுள் கொடுத்த வரமாக இருந்தாலும் கடவுளுக்கே கிடைக்காத வரம் இந்த நட்பு.
உறவு என்பது ஊஞ்சல் மாதிரி. அது சிலரை தாங்கும். சிலரை விழவைக்கும். நட்பு என்பது பூமி மாதிரி அது எல்லோரையும் தாங்கும்
உலகத்தில் காதலின் பிரிவை விட கொடுமையானது பல வருடங்கள் பழகிய நட்பின் பிரிவு.
காதலுக்கு எல்லைகள் உண்டு. ஆனால் நட்பிற்கு எல்லைகள் கிடையாது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2