சஷ்டியப்தபூர்த்தி யாருக்கு..? ஏன் செய்யணும்..? வாழ்த்துவோமா?

சஷ்டியப்தபூர்த்தி என்றால் என்ன? அதை யார் செய்வார்கள்? எப்படி செய்வார்கள் என்று பார்ப்போம் வாங்க.

Update: 2024-05-25 11:30 GMT

Sashtiapthapoorthi Wishes in Tamil

ஒரு பெண்ணை திருமணம் முடித்த ஒரு ஆண் தனது 60 வயதைத் தாண்டி 61வது வயதில் காலெடுத்துவைக்கும்போது செய்யப்படும் திருமணவிழா “சஷ்டியப்தபூர்த்தி” எனப்படுகிறது. அவர்கள் இல்லற வாழ்வில் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டு பிள்ளைகள், மருமகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளைகள் என எடுத்து முதிர்ந்த அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Sashtiapthapoorthi Wishes in Tamil

அன்பு. விட்டுக்கொடுத்தல், புரிதல், மகிழ்ச்சி , காதல், கடமை என பல பொறுப்புகளையும் உணர்ந்தவர்களாக இருப்பார்கள். அப்படியான தம்பதியில் ஆண் வயதை கணக்கிட்டு 61ம் வயதை அடையும்போது செய்யபப்டுவதே திருமணமான ஒரு ஆண் தனது மனைவியோடு இல்லற வாழ்வில் தனது 60 வயதை கடந்து 61 வயதில் அடியெடுத்து வைக்கும் போது செய்து கொள்ளும் ஒரு திருமண சடங்குதான், சஷ்டியப்த பூர்த்தி அல்லது “60 ஆம் கல்யாணம்” அல்லது “மணிவிழா” என்று அழைக்கப்படுகிறது.

இந்த சஷ்டியப்தபூர்த்தி சடங்கு என்பது ஒரு திருமண விழா போலவே கொண்டாடப்படுகிறது. திருமணமான அந்த ஆண் அதாவது மாப்பிள்ளையின் பிறந்த மாதத்தில், பிறந்த நட்சத்திர திதியில் செய்யப்படுகிறது. இந்த 60 வது திருமணவிழா எப்படி செய்யப்படுகிறது என்பது குறித்து அறிந்துகொள்ளலாம் வாங்க.


Sashtiapthapoorthi Wishes in Tamil

நமது தமிழ் காலக்கணக்கில் தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன. அதன்படி திருமணம் முடித்த ட ஒரு ஆண் இந்த 60 ஆண்டுகளைப் பூர்த்திசெய்து புதிய ஆண்டின் தொடக்கத்தில் கால்வைக்கும்போது அவருக்கான 61 வது ஆண்டு அல்லது 61வது வயது தொடங்கும். அவ்வாறு தமிழ் ஆண்டுகளில் 60 ஆண்டுகளைக்கடந்து தமிழ் காலக்கணக்கின் ஒரு முழு சுழற்சியை கடந்து 61 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்த தம்பதிகளுக்கு கிடைத்த ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே 61 ஆம் வயதில் அந்த ஆண் சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ளும் சம்பிரதாயச் சடங்கு பெரிதும் போற்றுதலுக்குரியதாகிறது.

Sashtiapthapoorthi Wishes in Tamil

குடும்பத்தில் மூத்தவர்களாக இருக்கும் இந்த தம்பதிகளின் திருமணத்தை அவர்களது பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகளான பேரக்குழந்தைகளும் காணும் அறிய வாய்ப்பு கிடைப்பது ஒரு வரம். அதனால் ஏற்படும் இரட்டிப்பு மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. லூடவே அந்த மொத்த தம்பதியின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைப்ப்பது ஒரு பெரும் பாக்கியமாக போற்றப்படுகிறது.

தம்பதிகளின் குழந்தைகள் மட்டுமல்லாமல் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் பிள்ளைகள் என ஒரு பெரும் உறவுக்கூட்டம் அவர்களிடம் ஆசிபெறுவது சிறப்பாகும். இந்த சஷ்டியப்தபூர்த்தி சடங்கு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களிடம் நல்ல நாள், நேரம் ஆகியவற்றை குறித்துக்கேட்டு அந்த நாளில் செய்வது சிறப்பாகும். இந்த விழாவை கோயிலிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது வீட்டிலோ நமது வசதிக்கு ஏற்ப செய்து கொள்ளலாம்.

Sashtiapthapoorthi Wishes in Tamil

திருமணத்துக்கு பெற்றோர் பத்திரிக்கை  வைத்து உறவினர்களை நண்பர்களை அழைப்பதுபோலவே, இந்த சஷ்டியப்த பூர்த்தியை அந்த தம்பதிகளின் பிள்ளைகள் உறவினர்களையும், நண்பர்களையும் முறைப்படி மணிவிழாவில் கலந்துகொள்ள அழைக்க வேண்டும்.


சஷ்டியப்தபூர்த்தி சடங்கு செய்யும் நாளில் அந்த தம்பதிக்கு அவர்களின் திருமணத்தின் போது செய்யப்பட்ட சடங்குகளை வேதியர் கூறியதுபோலவே அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் செய்வார்கள். குலதெய்வ பூஜை செய்வது அவசியம் ஆகும். அதன் பின்னர் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த ம்ரித்துஞ்சய ஹோமம், தன்வந்த்ரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும்.

அதன்பிறகே முகூர்த்த நேரத்தில் 61 வயதைக்கடக்கும் மாப்பிள்ளை புது தாலியை மணப்பெண்ணாக அமர்ந்திருக்கும் தனது மனைவியின் கழுத்தில் கட்டப்பட்டவுடன் சஷ்டியப்தபூர்த்தி சடங்கு நிறைவு பெறும்.

Sashtiapthapoorthi Wishes in Tamil

பெற்றோருக்கு சஷ்டியப்பூர்த்தி சடங்கு செய்வதால் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படுகின்றன. இச்சடங்கின் போது செய்யப்படும் ஹோமங்களின் பலன்களால் அத்தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலத்தையும் தருகிறது. 60 வயதை தாண்டும் அந்த ஆணின் மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தருகிறது.

பிள்ளைகள் வாழ்த்த, பேரப்பிள்ளைகள் வாழ்த்த, உறவினர் வாழ்த்த, உற்ற நண்பர்கள் வாழ்த்த இனிதாக முடிந்தது சஷ்டியப்த பூர்த்தி திருமண சடங்கு.

Sashtiapthapoorthi Wishes in Tamil


சஷ்டியப்தபூர்த்தி வாழ்த்துகள்:

அறுபது வயது நிறைவு பெற்று, அழகாய் அறுபத்தொன்றில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு இனிய சஷ்டியப்தபூர்த்தி நல்வாழ்த்துகள்.

அறுபது ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த இன்ப துன்பங்களை நினைத்து மகிழ்ந்து, இனி வரும் காலம் இன்னும் இனிமையாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

உங்கள் அன்பான குடும்பத்தாரோடு இணைந்து சஷ்டியப்தபூர்த்தியை சிறப்பாக கொண்டாடும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

வாழ்வில் இதுவரை சாதித்ததை நினைத்து பெருமிதம் கொண்டு, இனி வரும் காலத்தில் இன்னும் சிறப்பாக சாதிக்க வாழ்த்துகிறேன்.

அறுபது ஆண்டுகால அனுபவத்தின் மூலம் பெற்ற ஞானம், இனி வரும் தலைமுறைகளுக்கு வழிகாட்டட்டும்.

அன்பு, அறிவு, ஆரோக்கியம் நிறைந்த நீண்ட ஆயுளை இறைவன் உங்களுக்கு அருள வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

Sashtiapthapoorthi Wishes in Tamil

வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கவும், கவலைகள் அனைத்தும் நீங்கவும் வாழ்த்துகிறேன்.

உங்கள் அடுத்த அறுபது ஆண்டுகள் இன்னும் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

உங்கள் சஷ்டியப்தபூர்த்தி நாளில் உங்களுக்கு அனைத்து நலமும், வளமும் பெருக வாழ்த்துகிறேன்.

இந்த சிறப்பான நாளில், உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்

Tags:    

Similar News